இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டியில் ரோகி, ஷிகர் உள்பட 3 பேர் சாதனை படைக்க காத்திருக்கின்றனர்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று பிரிஸ்பென்னே கப்பா மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று நடைப்பெறும் இந்த போட்டியில் பல சுவாரசிய நிகழ்வுகள் காத்திருக்கின்றது....
- டி20 வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக ரன் அடித்தவர் என்ற பெருமையினை இந்திய வீரர் விராட் கோலி தக்கவைத்துள்ளார். 2016-ஆம் ஆண்டில் 15 இன்னிங்ஸ் விளையாடிய கோலி 641 ரன்கள் குவித்துள்ளார். இந்த சாதனையினை முறியடிக்க ஷிகர் தவான் 572(15 போட்டிகள்), ரோகித் ஷர்மா 560(16 போட்டிகள்) காத்திருக்கின்றனர். இன்றைய போட்டியில் இல்லை என்றாலும் இந்த தொடரில் இவர்கள் கோலி சாதனையினை முறியடிப்பது உறுதி.
- பந்துவீச்சாளர் பூம்ரா இன்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை குவித்தால், டி20 வரலாற்றில் 50-விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெரும்மையினை பெறுவார். இவருக்கு முன்னதாக அஷ்வின் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மொஹாலி போட்டியில் தனது 50-வது விக்கெட்டினை எடுத்தார். இன்றைய போட்டியில் பூம்ரா இந்த 4 விக்கெட்டுகளை குவித்துவிட்டால், டி20 வரலாற்றில் மிக விரைவில் 50 விக்கெட்டுகளை குவித்த 7-வது வீரர் என்ற பெருமையினையும் பெறுவார்.
- ரோகித் ஷர்மா 65 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் டி20 வரலாற்றில் அதிக ரன்குவித்தவர் என்ற பெருமையினை பெறுவார். 73 இன்னிங்ஸ் விளையாடி 2271 ரன்கள் குவித்துள்ள நியூசிலாந்து வீஅர் MJ குப்தில் தற்போது இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ரோகித் ஷர்மா 80 இன்னிங்ஸ் விளையாடி 2207 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.