COVID-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: புதுவை முதல்வர்

COVID-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2020, 05:07 PM IST
COVID-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: புதுவை முதல்வர் title=

புதுச்சேரி:  கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் பயணம், கிட்டத்தட்ட உலகம் முழுவதும் தனது வீரியத்தை பரப்பியுள்ளது. ஆம், நாளுக்கு நாள் கொரோனா தொற்று வைரசினால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கையும் தான். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நாட்டில் கொரோனா அச்சம் இன்னும் குறையவில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டது தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420ஆக உயர்ந்துள்ளது.  அங்கு கொரோனா தொற்று காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

புதுச்சேரி (Puducherry) மாநிலத்தில் கொரோனா காரணமாக பொருளாதாரம் முடங்கி உள்ளதால், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ரூ.490 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா நிவாரண நிதியாக பொது நிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளது என முதல்வர் நாராயணசாமி  கூறினார்.

ALSO READ | புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனாவா? வெளியானது அதிர்ச்சி தகவல்...

இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரூ.700 வழங்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி (V Narayanasamy) அறிவித்துள்ளார்.

 

 

ALSO READ | E-Pass இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி

 

Trending News