ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் விதிகளை மீறியவர்களிடம் ரூ.7,89,400 வசூல்!

முழு ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 929 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 03:29 PM IST
  • கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
  • தேவை இன்றி வெளியே சுற்றிய 877 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் விதிகளை மீறியவர்களிடம் ரூ.7,89,400 வசூல்!  title=

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு வாரநாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்த பத்தாயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

lockdown

நேற்று(16.01.2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி நேற்று காலை 6 மணி முதல் இன்று(17.01.2022) காலை 5 மணி வரை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில் காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை காவலர்கள் கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, முழு ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றிய 877 இருசக்கர வாகனங்கள், 27 ஆட்டோக்கள் மற்றும் 25 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 929 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் நேற்று(16.02.2022) கொரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முக கவசம் அணிவது தொடர்பாக 3947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.7,89,400 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிப்பது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.  ஆகவே வாரநாட்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு நாட்களிலும் சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News