நகை, பரிசு, ஜெயலலிதா மரணம் - சசிகலா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா பரபரப்பு தகவல்களை செய்தியாளர்களிடம் கூறினார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 23, 2022, 03:00 PM IST
  • ஜெயலலிதா மரணத்தின் புதிய தகவல்கள்
  • சசிகலா வெளியிட்டிருக்கிறார்
  • ஜெயலலிதா இறந்த தேதி குறித்தும் பேசியிருக்கிறார்
நகை, பரிசு, ஜெயலலிதா மரணம் - சசிகலா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் title=

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் வி .கே . சசிகலா பங்கேற்று ஆதரவற்றோருக்கு புடவை , வேட்டி உள்ளிட்ட நலத்திட்டங்களையும் , மதிய உணவாக மட்டன் பிரியாணியையும் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பேசுகையில், “நானும் ஜெயலலிதாவும் பெண்ணாக இருந்தாலும் பெண் சிங்கமாக இருந்தோம். கருணாநிதி தந்த தொந்தரவுகளை தாண்டி சாதித்தோம். முதுகிற்கு பின்னால் பேசுபவர்கள் நாங்கள் இருவரும் கிடையாது. எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்போலோ தனியார் மருத்துவர்கள் , தமிழ்நாடு அரசின் மருத்துவர்கள் என்று மூன்று தரப்பினர் நாள்தோறும் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை தந்தனர்.அதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. 

சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லலாம் என ஜெயலலிதாவிடம் கேட்டபோது அதை வேண்டாம் என்று அவர் மறுத்தார் . அவரை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது . ஆனால் தமிழ்நாட்டிலேயே நல்ல மருத்துவம் கிடைப்பதாகவும் ,  சிகிச்சையின்போது தனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஜெயலலிதா கூறினார் . இறக்கும் அன்று மாலையில்கூட அவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.  

அனைத்து மருத்துவர்கள்,செவிலியர்களுடன் நன்றாக பேசுவார் . டிசம்பர் 19ஆம் தேதி ஜெயலலிதாவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று  இருந்தோம். டிசம்பர் 15ஆம் தேதி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். செவிலியர்களுக்கு கொடுக்க வளையல்  உள்ளிட்டவற்றையெல்லாம் ஜெயலலிதாவே தேர்வு செய்து வைத்திருந்தார். டிசம்பர் 15ஆம் தேதி  அவற்றை ஒப்படைக்குமாறு ஆர்டர் கொடுத்திருந்த நகைக்கடை நிறுவனத்திடமும் கூறியிருந்தார். 

தீபா உள்பட யாரையும் நான் திட்டியதில்லை அறிவுரைதான் கூறுவேன். நேரடி அரசியலில் நான் இல்லாவிட்டாலும் 24 மணி நேரமும் மக்களுக்கான திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவுடன் ஆலோசித்திருக்கின்றேன். 1982ல் ஜெயலிலிதாவை நான் சந்தித்தது முதல் ஆண்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது , பெண்கள் வெளிவருவது மிகவும் கஷ்டமாக இருந்த அந்த சூழலில்தான் ஜெயலலிதாவுடன் வந்தேன். 

Sasikala

அதிமுகவினர் அனைவரையும் நான் ஒன்றிணைப்பேன் என இப்போதும் சொல்கிறேன்.பழனிசாமி , பன்னீர்செல்வம்தான் தனித்தனியாக செயல்படுகின்றனர்.நான் அப்படியல்ல. பெங்களூரில் இருந்து வெளிவந்த போது கூறியதையே இப்போதும் சொல்கிறேன்.  நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை பெறுவோம். 

தனியாக இருப்பதால் பன்னீர்செல்வம் , பழனிசாமி இருவரும் ஒருவர் ஒருவர் தாக்கி பேசிக் கொள்கின்றனர். ஒரு தாய் போல அனைவருக்கும் பொதுவான ஆளாக நான் இருக்கிறேன் . அதிமுக தொண்டர்களை நான் பிரித்துப் பார்க்கவில்லை. அனைவருக்கும் திருமண விழா வாழ்த்து செய்தி அனுப்பி வருகின்றேன். 

கட்சியில் தொண்டர்கள் எடுக்கும் முடிவே நிரந்தரமானது. எனக்கு என தனியாக ஆள் இல்லை. நான் இருக்கும்வரை அதிமுக தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள். அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன்.

தனக்கு பிறகு  தலைமைப் பொறுப்பில் யாரை நியமித்தால் சரியாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும் , அதற்கான பணியில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில்தான் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டார். பெங்களூருக்கு சிறை செல்லும் முன்பு அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். எல்லோர் மனதும் ஒரே மாதிரியாக இருக்காது.

நான் எந்த உயரம் சென்றாலும் என் பாதத்தை பார்த்தே நடப்பேன். ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் வந்தோ வழக்கறிஞர்கள் மூலமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ விளக்கம் தருமாறு கூறினர். ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து கேள்விகளுக்கும் எழுத்து வடிவிலும் சரியான பதிலை கொடுத்தேன். காரணம் ஜெயலிலிதா மரணம் குறித்து மக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும் என்று நான் நினைத்தேன். 

ஜெயலலிதா இறந்த தேதி டிசம்பர் 5தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள்தான் அவர் இறந்த தேதி வேறு என்று கூறி வருகின்றனர்” என்றார்.

மேலும் படிக்க | புதிய வகை கரோனா : மீண்டும் அமலுக்கு வரும் பாதுகாப்பு நடைமுறைகள்... என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News