ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுலுக்கு சசிகலா நன்றி

ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட குடியரசுதலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சசிகலா நடராஜன் நன்றி கடிதம் எழுதியுள்ளார்.

Last Updated : Dec 20, 2016, 01:59 PM IST
ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுலுக்கு சசிகலா நன்றி  title=

சென்னை: ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட குடியரசுதலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சசிகலா நடராஜன் நன்றி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 5-ம் தேதி தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பால் காலமானார். காலமான மறுநாள் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

 

இந்நிலையில், சசிகலா இன்று இம்மூவருக்கும் தனித்தனியாக கடிதங்களை எழுதினார். அதில் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலிக்கு நேரடியாக வந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். 

Trending News