முதுகலை நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை

கடிதத்தை கைப்பற்றிய வேப்பேரி போலீசார் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 07:45 AM IST
முதுகலை நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை title=

சென்னை சூளையில் உள்ள நாராயணகுரு சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதியில் நாமக்கல் மாவட்டம் போத்தனூர் ஜாதகர் பாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான கார்த்திகா என்ற பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 2015 தொடங்கி 2021 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து முடித்தார். 

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர் சூளை பகுதியில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் முதல் மாடியில் அபிராமி மற்றும் கீர்த்தனா என்ற பெண்களோடு தங்கி வந்துள்ளார். 

இவர் நீட் (NEET) தேர்வுக்கு ஆன்லைனில் படித்து வருகிறார். இவருடன் அறையில் தங்கியுள்ள இரண்டு மாணவிகள் பொங்கலுக்கு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், நேற்று உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றவர், மாலை மூன்று மணி ஆகியும் வெளியே வராததால் அருகிலுள்ள மாணவி பார்த்து விடுதி உரிமையாளர் சுஜைய்குமாருக்கு தகவல் தெரிவித்தார். 

அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் உள்ள இரும்புக் கம்பிகளில் துப்பட்டாவால் தூக்கிட்டு இருந்த நிலையில் அவர் இருந்தார். பின்னர் காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. போலீசார் உடலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

ஒரு வெள்ளை நிறத்தாளில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் கைப்பற்றப் பட்டுள்ளதாக போலீசார் (TN Police)தெரிவித்துள்ளனர். மேலும் இறந்தவரின் தோழியிடம் கேட்டபோது கார்த்திகா நீட் தேர்விற்கான பாடத்தை முடிக்கவில்லை என்றும், மேலும் தேர்வு முன்கூட்டியே வருவதாக கூறப்பட்டதால் அவர் வேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார். 

கடிதத்தை கைப்பற்றிய வேப்பேரி போலீசார் இந்த தற்கொலை (Suicide) சம்பவம் தொடர்பாக கவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!

ALSO READ | கொலையில் முடிந்த தகராறு.. அண்ணனை வெட்டிய தம்பி..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News