அதிர்ச்சி! சென்னையில் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. தற்கொலை!

சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Mar 7, 2018, 09:43 AM IST
அதிர்ச்சி! சென்னையில் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. தற்கொலை! title=

சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், காவல் நிலையத்துக்கு வந்தது முதல் தற்கொலை செய்து கொண்டது வரையிலான அனைத்து சம்பவங்களும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. 

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், கடந்த 2011-ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவர் அயனாவரத்தில் ரவுடிகளை ஒழிப்பதில் திறமையாக செயல்பட்டவர் என்று பாராட்டு பெற்றவர்.

இந்த தற்கொலை தொடர்பாக காவல் ஆணையர் மற்றும் காவல்துறையினர் அயனாவரம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News