ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முயற்சி தவறு என்பது திமுக-வின் கருத்து என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான ஆதரவும் எதிர்ப்பும் நிலையாக உள்ள நிலையில், இது குறித்து முக்கிய அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், நேற்றும் மற்றும் இன்றும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகின்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் இது தொடர்பாக சட்ட ஆணையத்திடம் தனது கருத்தை பதிவு செய்துள்ளதாக தெரவித்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையலர்களிடம் அவர் கூறியதாவது...!
மாநில சுயாட்சி மாநாடு நடத்துவதற்கான முயற்சி செய்து வருகிறோம். இது முடிவடைந்ததும், மாநாடு எங்கு நடக்கும், எப்போதும் நடக்கும் என்பதை விரைவில் அறிவிக்கப்படும்.
8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் சென்னையில் இருந்து பேட்டி கொடுக்கலாம். சட்டசபையில் முதல்வர் தவறான தகவலை சொல்லலாம். சேலத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து அவர்கள் ஏற்று கொண்டால், நானும் ஏற்று கொள்கிறேன்.
ஆர்கே நகர் தேர்தலின் போது, விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தது. தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அது என்ன ஆனது என தெரியவில்லை. அதேபோல் இதுவும் ஆகிவிடக்கூடாது என்பதே எனது கருத்து என அவர் தெரிவித்துள்ளார்.