சிறப்பு ரயில்கள்: சென்னையிலிருந்து மதுரை மற்றும் கோவை

Last Updated : Jul 13, 2016, 10:56 AM IST
சிறப்பு ரயில்கள்: சென்னையிலிருந்து மதுரை மற்றும் கோவை title=

கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து மதுரை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

* மதுரை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆனது மதுரையில் இருந்து சென்னைக்கு ஜூலை 22 மற்றும் 29-ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை மட்டும்) காலை  10 மணிக்கு புறப்படும். மாலை 6.50 மணிக்கு      சென்னையை வந்தடையும்.

* கோவை-சென்னை சென்டிரல் சிறப்பு ரயில் ஆனது கோவையில் இருந்து ஜூலை 22 மற்றும் 29-ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை மட்டும்) காலை 11 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை          சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

* மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-மதுரை சிறப்பு ரயில் ஆனது சென்னையில் இருந்து ஜூலை 25 மற்றும் ஆகஸ்டு 1-ம் தேதிகளில் (திங்கட்கிழமை மட்டும்) காலை 6.15 மணிக்கு புறப்பட்டு அதேநாள்    பிற்பகல் 3 மணிக்கு மதுரையை சென்றடையும். 

* மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்-கோவை சிறப்பு ரயில் ஆனது சென்னையில் இருந்து ஜூலை 25 மற்றும் ஆகஸ்டு 1-ம் தேதிகளில் (திங்கட்கிழமை மட்டும்) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு   அதேநாள் மாலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.

Trending News