கொல்கத்தா செல்கிறார் நாளை முக ஸ்டாலின்!!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கொல்கத்தா செல்கிறார்.

Last Updated : Jan 17, 2019, 11:03 AM IST
கொல்கத்தா செல்கிறார் நாளை முக ஸ்டாலின்!! title=

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கொல்கத்தா செல்கிறார்.

 

 

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு மாநிலக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் வரும் 19-ம் தேதி எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் நடைபெற உள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை கொல்கத்தா செல்கிறார். மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரசாரம் மற்றும் வியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர்.

Trending News