Tamil Nadu 10th Result: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Tamil Nadu 10th Results: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.  www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.    

Written by - RK Spark | Last Updated : May 19, 2023, 10:57 AM IST
  • வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.
  • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
  • மாணவர்கள் அரசின் இணைய தளங்களில் பார்க்கலாம்.
Tamil Nadu 10th Result: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!  title=

Tamil Nadu 10th Results: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதேபோல், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்த இரண்டு பொதுத்தேர்வு முடிவுகளும் ஒரேநாளில், வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, 10, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலவகாசம் நீட்டிப்பு - மே 23 வரை விண்ணப்பிக்கலாம்

12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில்  சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில்  14 ஆயிரத்து 728 மாணவர்களும் இந்த பொதுத்தேர்வை எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

மேலும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாத 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், இப்போது துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மே 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த காலவகாசத்தை மாணவ மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

 

மேலும் படிக்க | நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News