10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர். இதனைத்தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மாணவிகளே அதிகம் தேர்ச்சி
தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9.10 லட்சம் மாணாக்கர்களில் சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதன்படி மாணவிகள் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.58% அளவிற்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் முதலிடம்
நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதிய நிலையில், அவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் 97.31 விழுக்காடு பெற்று 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை 97.02, ராமநாதபுரம் 96.36 என்ற தேர்ச்சி விகிதம் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. வேலூர் மாவட்டம் 82.02 விழுக்காடு தேர்ச்சி விகிதம் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
அரசு பள்ளி vs தனியார் பள்ளிகள் : தேர்ச்சி விகிதம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 87.90 சதவிகிதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 91.77 சதவிகிதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 97.43 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகள் 91.93 சதவிகிதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவிகிதமும், ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவிகிதமும் தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.
பாடவாரியான தேர்ச்சி விகிதம்
நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் 96.85 சதவிகிதமும், ஆங்கிலத்தில் 99.15 சதவிகிதம் பேரும், கணிதத்தில் 96.78 சதவிகிதம் பேரும், அறிவியலில்96.72 சதவிகிதம் பேரும் மற்றும் சமூக அறிவியலில் 95.74 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ