தமிழக பட்ஜெட் 2024: குடிசையில்லாத் தமிழ்நாட்டுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

Kalaignar Kanavu Illam: கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 19, 2024, 11:40 AM IST
  • கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.
  • தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்.
  • வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
தமிழக பட்ஜெட் 2024: குடிசையில்லாத் தமிழ்நாட்டுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் title=

Tamil Nadu State Assembly Budget Session 2024 2025 Kalaignar Kanavu Illam: கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3500 கோடி ரூபாய் செலவில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் : 
2024 - 25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவர் பேரவையில் வந்து அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுவதுமாக வாசித்தார். இது தொடர்பான சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 ஆம் தேதி அதாவது இன்று தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க | Tn budget: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?

2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் :
2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை (Tamil Nadu Budget 2024-25) தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபையில் தாக்கல் (TN Assembly) செய்யப்பட்டது. முன்னதாக “தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் நாளை அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

கலைஞரின் கனவு இல்லம்:
இந்நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (Kalaignar Kanavu Illam) வரும் நிதியாண்டில் ரூ.3,500 கோடி செலவில் அமைத்துத் தரப்படும் என்கிற முக்கிய அறிவிப்பு ஒன்று பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது. மேலும் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் நோக்கத்தில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கி கொள்ளும் குறிப்பிடத்தக்க அம்சங்களை தாங்கி புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு வீடும் 3.5 லட்சம் மதிப்பில் கட்டித் தரப்படும். 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டி குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவத்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2024: புதிய அறிவிப்புகள் என்ன? முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News