தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!

Last Updated : Mar 18, 2019, 10:58 AM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடி குண்டு மிரட்டல் title=

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் அதிமுக 20 இடங்களில் களம் காண்கிறது. இதை தொடர்ந்து, இன்று நீண்ட ஆலோசனைக்கு பிறகு அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. 

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி வசித்துவரும் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பு விடுத்தவர் குறித்த விவரங்களை கேட்பதற்குள் அவர் அழைப்பை துண்டித்துவிட்டார். 

இதனையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர்  மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்று தெரியவந்தது. அழைப்பு விடுத்தவரின் அலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக சுந்தர்ராஜ் என்பவரை பிடித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Trending News