தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு துவக்கம்!

சென்னையில் இன்று தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்குகிறது. மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது. 

Last Updated : Mar 5, 2018, 10:39 AM IST
தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு துவக்கம்! title=

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடத்தப்பட்டது. அதையடுத்து இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகலுக்கான மாநாடு துவங்கயுள்ளது. தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு என்றே தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட கூட்ட அரங்கில் இந்த மாநாடு நடக்கிறது. 

இந்த மாநாடானது மூன்று நாள் நடைபெறும் என்றும் இதில் 32 மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், ஐ.ஜி-க்கள், டி.ஐ.ஜிக்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

நாளை நடக்கும் இரண்டாம் நாள் கூட்டத்தில் கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மட்டும் பங்கேற்பார்கள். இறுதி நாள் நிகழ்வில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மட்டும் கூட்டம் நடத்தப்படுகிறது. முடிவில், சிறந்த கலெக்டர், எஸ்.பி-க்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுவது, திட்டங்களை நிறைவேற்றுவதில் எழும் சிக்கல்களை சமாளிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Trending News