தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கினை ஆளுநர் துவக்கி வைத்தார்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூடும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கினை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் துவக்கி வைத்தார்!

Last Updated : Apr 20, 2018, 01:33 PM IST
தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கினை ஆளுநர் துவக்கி வைத்தார்! title=

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூடும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கினை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் துவக்கி வைத்தார்!

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அவர்கள் தெரிவித்ததாவது... "இக்கருத்தரங்கை துவக்கி வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கருத்தரங்கு அறிவு, கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றை பரிமாற்றம் செய்துகொள்ள ஒரு சிறந்த தளமாக பயன்படும் என நம்புகிறேன். இவ்வமைப்புகள் மூலம் குறைந்த செலவில் உயர்ந்த திறன் மிக்க தொழில்நுட்பம் உருவாக்கப்படும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஒருமுறை முழுமையான அறிவியல் என்பது தினசரி சிந்தனையை மெருகேற்றுவது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று கூறினார். தினசரி சிந்தனையை பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிடும்போது விஞ்ஞானத்தில் நாட்டம் ஏற்பட ஞானம் அதிசியமானது என்று தெரிவித்தார். 

இன்றையதினம் விஞ்ஞானம் அறிவியல் பாதுகாப்பு அமைப்பு, ஆற்றல் அமைப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு, கணினி முறைமை மற்றும் மின் அமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டிருக்கும் இந்த வல்லுநர்கள் ஒவ்வொருவரும் தனது சொந்த துறையில் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் ஒருங்கிணைந்த ஞானம் மிகப் பெரிய ஆற்றலின் வெளிப்பாடாக உருவாகும் என்றார்.

ஒருமுறை நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன் அவர்கள் விக்ரம் சாராபாயிடம் என்ன வேலை செய்ய விருப்பம் என்று வினவினார். சாராபாய், தனக்கு காஸ்மிக் கதிர்கள் பற்றி ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ள விருப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இது நமது நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தொழில்நுட்பம் என்றும். இதுகுறித்து தான் 35 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சி செய்து ஒலி அதிர்வுகளை தட்டுகளில் பதிவு செய்வதாகவும் கூறினார். தாங்களும் இது குறித்து அண்டவியல் கதிர் இயற்பியலில் ஆராய்ச்சி செய்து, அடிப்படைத் துகள்களை கண்டுபிடித்தால் உங்களுக்கும் நோபல் பரிசு கிடைக்கும் என்று ராமன் அறிவுரை கூறினார். ஆனால் விக்ரம் சாராபாய் அவருடைய அறிவுரையை பின்பற்றாததால், பிரிஸ்டலன் பவல் என்பவருக்கு அப்பரிசு கிடைத்தது. இருப்பினும் விக்ரம் சாராபாய் பின்னாளில் விண்வெளியின் தந்தை என புகழாரம் சூட்டப்பட்டார்.

நாட்டின் நலனுக்காக தங்களின் தனிப்பட்ட பலன்களை தியாகம் செய்த விஞ்ஞானிகள் தேசிய அங்கீகாரம் பெற்றனர். ஏற்கெனவே செய்த விஞ்ஞான முன்னேற்றங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் நன்மைகளை நமது நாட்டின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு அர்ப்பணித்த விஞ்ஞானிகள் மற்றும் முயற்சி செய்துவரும் விஞ்ஞானிகளின் சேவைகளை பாராட்டுகிறேன் என்றார்.

மேலும் இன்றைய உலகின் அமைப்பு பொறியியல் நன்மைகளை உணர்ந்து கொண்ட அமைப்பாளர்களை பாராட்டுகிறேன். பெரிய திட்டங்களை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய இந்த மாநாட்டின் கலந்துரையாடல்கள் பெரிதும் உதவுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். பெரிய திட்டங்களை செயல்படுத்தும் போது குறைந்த செலவு, உயர் வெளியீடு குறைந்த கழிவுப்பொருள், குறைந்த இறக்குமதிகள், சுய நம்பிக்கை மற்றும் நுண்ணறிவு ஆகியவை தங்களின் கலந்துரையாடல்களுக்குப் பின் பலன்கள் ஏற்படும் என்று உணர்கிறேன். இம்மாநாட்டின் அமைப்பாளர்களையும், பங்கேற்றுள்ளவர்களையும் அவர்களது முயற்சிகளில் வெற்றி ஏற்பட வாழ்த்துகிறேன். என தெரிவித்துள்ளார்!

Trending News