தைப்பூசத்தில் பழனியில் குவிந்த பக்தர்கள்: கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பழநி தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்துள்ள ஏராளமான பக்தர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், பக்தி, ஆன்மீக அமைப்புகள் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 18, 2022, 08:02 PM IST
  • பழனியில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
  • இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
  • அன்னதானம் வழங்கும் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
தைப்பூசத்தில் பழனியில் குவிந்த பக்தர்கள்: கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல் title=

பழனியில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து பக்தர்கள் பழனி கிரிவீதி பகுதியில் ஏராளமாக குவிந்துள்ளனர். 

நாளை கோவில் திறந்ததும் சாமி தரிசனம் செய்துவிட்டு தான் செல்வோம் என பலர் பிடிவாதமாக அங்கேயே அமர்ந்து உள்ளனர். சிலர் கிரி வீதியில் ஆங்காங்கு சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வாழிபாடு செய்தும்  வருகின்றனர். பலர் அங்கேயே அமர்ந்து உணவுகளையும் உண்கின்றனர். இதனால் பழனியில் பக்தர்கள் கூட்டம் கடல்போல் திரண்டுள்ளது. 

இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியவில்லை. பக்தர்களை வெளியேற்றவும் முடியவில்லை. இதனால் போலீசார் பக்தர்களிடம் அன்பாக கூறி கொரோனா தடை (Corona Restrictions) குறித்து விளக்கி சீக்கிரம் ஊர்களுக்குச் செல்லுங்கள் என அறிவுறுத்தி வருகின்றனர். 

ALSO READ | பழனியில் தைப்பூச திருவிழாவிற்கு குவிந்த பக்தர்கள்

இதனிடையே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பழநி தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்துள்ள ஏராளமான பக்தர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், பக்தி, ஆன்மீக அமைப்புகள் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானத்தைப் பெற பக்தர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

மேலும் பழனியை (Pazhani Thai Poosamm) சுற்றி ஆங்காங்கு உணவுக் கூடங்கள் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் தரமானதாக இருக்கிறதா என்பதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் கூறுகையில், "பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படவேண்டும். பாத்திரங்கள் சுத்தம் செய்யப் பட்டுள்ளதா, தரமான எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறதா, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறோம். மேலும் வழியில் இருக்கும் கடைகளில் தரமற்ற பொருட்கள் இருந்தால் அபராதம் விதிக்கிறோம். இங்கு வழங்கப்படும் வடை மற்றும் சாம்பார் மற்றும் குழம்புகளை ஆய்வு நடத்தி வருகிறோம். பக்தர்கள் உணவு தரமற்றதாக இருந்தால், உடனடியாக உணவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம்." என்றார். 

ALSO READ | பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News