திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம்: தங்கதமிழ்ச்செல்வன்

2 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்; ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : May 7, 2019, 01:03 PM IST
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம்: தங்கதமிழ்ச்செல்வன் title=

2 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்; ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்!!

ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’ திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். மே- 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நடைபெறும். இதற்காக திமுக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். அப்போது அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். அடுத்து ஆட்சி அமைக்க திமுக- அதிமுகவுக்கு ஆதரவு தரமாட்டோம். ஆனால் திமுகவுடன் சேர்ந்து இந்த ஆட்சியை கலைப்போம்.

அமமுக ஆதரித்தால் மட்டுமே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும்’’ என அவர் தெரிவித்துள்ளார். திமுகவுக்கும்- அமமுகவுக்கும் இடையே மறைமுக தொடர்பு இருப்பதாக அதிமுக தெரிவித்து வந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது திமுகவுக்கு அமமுக ஆதரவு தரும்’’ என தங்க தமிழ்ச்செல்வன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

 

Trending News