குழந்தை கடத்தல் வதந்தி: வடமாநில இளைஞர் மீது வெறி தாக்குதல்!

குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து வட மாநில இளைஞகள் மீது வெறி தாக்குதல் நடத்திய பொது மக்கள்!!

Last Updated : Jul 2, 2018, 05:37 PM IST
குழந்தை கடத்தல் வதந்தி: வடமாநில இளைஞர் மீது வெறி தாக்குதல்! title=

குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து வட மாநில இளைஞகள் மீது வெறி தாக்குதல் நடத்திய பொது மக்கள்!!

தமிழகத்தில் குழந்தை கடத்தல் பற்றிய வதந்திகள் சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது. பொது மக்கள் குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து வட மாநில இளைஞகள் மீது வெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரைப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த சனிக்கிழமை, சென்னை தேனாம்பேட்டையில் காமராஜா் சாலையில் மெட்ரோ ரயில்வே கட்டுமான பணிகள் மேற்கொண்டு வந்த வடமாநிலங்களைச் சோ்ந்த கோபால், பினோத் விகாரி ஆகியோர் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனா். 

அப்போது அவ்வழியாக வந்த அவினாஷ் என்ற 4 வயது சிறுவன் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தான். சிறுவனை பார்த்த கோபால், சிறுவனிடம் உனது பெற்றோர் யார்? ஏன் தனியாக சென்று கொண்டு இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதை கண்ட பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்கள் வடமாநில இளைஞா்களின் நடத்தையில் சந்தேகம் கொண்டு குழந்தை கடத்தும் கும்பல் என்று கூச்சலிட்டுள்ளனா்.

இதையடுத்து, அந்த வடமாநில இளைஞா்கள் கூச்சலுக்கு பயந்து தப்பி ஓட முயன்றுள்ளனா். ஆனால், கோபால், பினோத் விகாரி ஆகியோரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனா். இதில் படுகாயமடைந்த இருவரும் சுயநினைவின்றி இருந்தனா். தகவல் அறிந்த காவல் துறையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவா்களை மீட்டு அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். 

காயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த காவல்த்துறை அதிகாரி மக்கள் சந்தேகப்படும்படியான நபர்களை நீங்கள் கண்டால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் குழந்தை கடத்தல் பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

 

Trending News