ஜெ சிலைக்குத்தான் பேரறிவாளன் மாலை போட்டிருக்க வேண்டும் - இயக்குநர் பேரரசு

பேரறிவாளன் ஜெயலலிதா சிலைக்குத்தான் முதலில் மாலை போட்டிருக்க வேண்டுமென இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 22, 2022, 08:22 PM IST
  • விடுதலையானார் பேரறிவாளன்
  • பேரறிவாளன் குறித்து பேரரசு பேச்சு
ஜெ சிலைக்குத்தான் பேரறிவாளன் மாலை போட்டிருக்க வேண்டும் - இயக்குநர் பேரரசு title=

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். அவரை விடுதலை செய்யக்கோரி அவரது தாய் அற்புதம்மாள் பல காலம் சட்டப்போராட்டம் நடத்திவந்தார். தமிழ்நாடு அமைச்சரவையும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. 

ஆனால் அந்தத் தீர்மானத்தின் மீது பல மாதங்களாக ஆளுநர் பாராமுகத்துடன் இருந்தார். இதனால் பேரறிவாளின் விடுதலை தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஆளுநரின் இந்த மெத்தனத்திற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் முதல் சாமானியர்கள்வரை கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சூழலில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

Perarivalan

விடுதலையான பேரறிவாளன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நேரில் சென்று சந்தித்தார்.

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையானதும் முதலில் ஜெயலலிதா சிலைக்குத்தான் மாலை அணிவித்திருக்க வேண்டுமென இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

Perarivalan

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பேரறிவாளன் விடுதலைக்கு முதன்முதலாக சட்டமன்றத்தில்  தீர்மானம் போட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.

 

பேரறிவாளன் விடுதலையானவுடன் முதன்முதலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்காமல் ஜெயலலிதா சிலைக்குத்தான் மாலை அணிவித்திருக்க வேண்டும். இல்ல அவரின் சமாதிக்காவது போயிருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | வெற்றிமாறனின் விடுதலைக்காக உருவாகும் கிராமம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News