எக்ஸ்பிரஸ் ரயிலில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த பெண்....

எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2018, 04:09 PM IST
எக்ஸ்பிரஸ் ரயிலில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த பெண்....  title=

எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்....! 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி என்பவர் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியான ஸ்வர்ணலதாவுடன், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு வந்துகொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். 

அப்போது, அந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை அருகே வந்து கொண்டிருந்த போது, ஸ்வர்ண லாதாவுக்கு திடீர் என பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த அப்போலோ மருத்துவமனை உதவி மைய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதை தொடர்ந்து, எழும்பூர் ரயில் நிலையத்தை ஹவுரா ரயில் அடைந்ததுடன், கர்ப்பிணி இருந்த பெட்டிக்கு சென்ற மருத்துவக் குழு, அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்தனர். இதையடுத்து, அவருக்கு அங்கேயே பிரசவம் பார்த்ததில், ஸ்வர்ண லதா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் தாயும் சேயும் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்  செல்லப்பட்டனர். 

 

Trending News