அதிமுகவை அக்கட்சியினரே அழித்துவிடுவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

கடந்த 5 நாட்களாக சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

Updated: Nov 14, 2017, 01:29 PM IST
அதிமுகவை அக்கட்சியினரே அழித்துவிடுவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்
Zee News Tamil

கடந்த 5 நாட்களாக சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்நிலையில், நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில்,

தமிழகத்தில் சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்கிறது. வருமான வரித்துறை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை. பாஜக தவறுக்கு துணை போகாது. தவறு செய்ய தூண்ட மாட்டோம். தவறு செய்வோரையும் விடமாட்டோம்.

கருப்பு பணத்தை கண்டறியவே சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று கருத்து சொல்ல முடியாது. 

தவறு செய்பவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது, நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை பாயும். மேலும் அவர் பேசுகையில் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது ஏனென்றால் அந்தக் கட்சியினரே அழித்துவிடுவார்கள் இது தான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close