கிளாம்பாக்கம் பிரச்னை: சூடான சேகர்பாபு... குறுக்கிட்ட இபிஎஸ்... விவாதத்தை முடித்த ஸ்டாலின்!

TN Assembly Question Session: சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து நடைபெற்ற காரசார விவாதத்தை இங்கு முழுமையாக காணலாம். 

Written by - Nowshath | Edited by - Sudharsan G | Last Updated : Feb 13, 2024, 01:24 PM IST
  • செல்லூர் ராஜூ முதலில் இதுகுறித்த கேள்வியை எழுப்பினார்.
  • அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் பதிலளித்தனர்.
  • எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு பேசிய நிலையில், முதலமைச்சர் விவாதத்தை முடித்து வைத்தார்.
கிளாம்பாக்கம் பிரச்னை: சூடான சேகர்பாபு... குறுக்கிட்ட இபிஎஸ்... விவாதத்தை முடித்த ஸ்டாலின்! title=

TN Assembly Question Session, Kilambakkam Issue: 2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று (பிப். 12) தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று மறைந்த தலைவர்கள் விஜயகாந்த் உள்பட பலருக்கும் இரங்கல் தெரிவித்து அதுதொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதன்பின், சட்டப்பேரவையில், கேள்வி நேரம் தொடங்கியது. பல்வேறு பிரச்னைகள் குறித்த கேள்விகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர் அப்பாவு மூலம் கேட்க அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். அந்த வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (Kilambakkam Kalaignar Centenary Bus Stand) குறித்து கேள்வி நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.  

கிளாம்பாக்கம்: செல்லூர் ராஜூவின் கேள்வி

அதில்,"தென்மாவட்டங்களில் இருந்து வேலைதேடி சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், அவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு () நின்று விடுவதால் மிகுந்த சிரமப்படுவதால், அவர்கள் அவதிப்படாமல் வந்து செல்லவும், பேருந்து நிலைய பிரச்சனை முடியும் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மகக்ள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்" என செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க | கிளாம்பாக்கம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் பரவுகிறது - அமைச்சர் சிவசங்கர்!

அமைச்சர்கள் பதில்

அதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்படும் போதும் இதே போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. பின்நாளில் அனைத்தும் சரி செய்யப்பட்டது. 

பேருந்தில் பயணித்த பயணிகள் யாரும் எந்த ஒரு குறையும் கூறவில்லை. பேருந்தில் பயணிக்காதவர்கள் தான் குறை கூறுகின்றனர். கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்துகள் 80% பேருந்துகள் கிளாம்பாக்கப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது, 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது" என்றார். 

தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு பதிலுரை ஆற்றினார். அப்போது, "கடந்த  அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 2013இல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, 2018இல் டெண்டர் கோரப்பட்டு, 2019இல் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. அதிமுக ஆட்சியில் 30% பணிகள் மட்டுமே நிறைவடைந்திருந்தது. 

'எக்கச்சக்க வசதிகள்'- சேகர்பாபு

கோயம்பேடு பேருந்து நிலையம் 37 எக்கர் அளவில் உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 87 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதிக அளவு மக்கள் பயன்படுத்தினர். ஆனால் 45 நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை  பயன்படுத்தி உள்ளனர். 

இந்த பேருந்து நிலையத்தில் மூன்று உணவகங்கள், மருத்துவமனைகள், 45 கடைகள், காலநிலை பூங்கா, மழைநீர் வடிகால், நுழைவாயில் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் அனுமதியுடன் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்ட இருக்கிறது. 60 கோடி ரூபாய் அளவிற்கு  புதிய நடை மேம்பாலம் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கிளாம்பாக்கத்தில் TNSTC பஸ்கள்: எந்தெந்த ஊருக்கு எந்தெந்த பிளார்ட்பார்ம்?

இதனால் இத்தனை பிரச்னை...

மேலும் அங்கு ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று ஆறு மாதத்தில் நடைமுறைக்கு வரும். மெட்ரோ திட்டத்திற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. பயணிகள் யாரும் இதுவரையில் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையென்று புகார் செய்யவில்லை.

நள்ளிரவு 2 - 4 மணிக்குள் பேருந்து பற்றாக்குறை என்று சில ஊடகங்கள் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.   பயணிகள் நடப்பதற்கு சிரமம் ஏற்படுவதால், அவர்களின் சிரமத்தை போக்குவதற்காக 1 கி.மீ தூரத்திற்கு 12 பேட்டரி கார்கள்  இயக்கப்பட்டு வருகிறது. புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையம் என்பதால் சிறு சிறு பிரச்சனைகள் உள்ளது, அவை வரும் காலங்களில் சரி செய்யப்படும். 

கலைஞர் (முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின்) பெயரை அந்த பேருந்து நிலையத்திற்கு வைத்ததால்தான் எதிர்க்கட்சிகள் பிரச்சனை ஏற்படுத்துகிறது என தோன்றுகின்றது. அதிமுக ஆட்சிக் காலத்தில் முப்பது சதவீத பணிகள் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் 100 கோடி ரூபாய் செலவில் திட்டம் வடிவமைக்கப்பட்டது" என்றார். 

மேலும் படிக்க | கிளாம்பாக்கத்திற்கு வரவே வேண்டாம்... மின்சார ரயிலில் சிட்டிக்குள் வர இந்த இடத்தில் இறங்கவும்!

குறுக்கிட்ட இபிஎஸ்

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy), "என்னுடைய அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள சிறு, சிறு குறைபாடுகளை சரி செய்த பின் பேருந்து நிலையம் திறந்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அங்குள்ள பிரச்சனையால் மக்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதெல்லாம் நாளிதழில் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக வந்தது.

பயணிகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பயணம் சிறப்பாக அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாகும். அவசரப்பட்டு பேருந்து நிலையம் திறந்ததாலே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகாலம் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுக்காக்கும் பணியை அதிமுக அரசு சிறப்பாக செய்தது. அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னதாக ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. ஆகவே தான் சிறிய பிரச்சனை கூட இல்லாமல் சரி செய்து மக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கிறோம்" என்றார்.

முடித்து வைத்த முதல்வர் 

அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் (CM MK Stalin), "சிறு சிறு பிரச்சனைகள் மட்டுமல்லாமல், பெரிய பெரிய பிரச்சனைகளையும் தீர்த்து வைத்துள்ளோம். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் நேரடியாக கூட அழைத்துச் சென்று அந்த பேருந்து நிலையத்தை காண்பிக்கிறோம். என்ன பிரச்சனை உள்ளது என்று கூறட்டும். இன்னும் பிரச்சினைகள் இருந்தால் கொண்டு வாருங்கள், அதையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம். இத்தோடு இந்த பிரச்னையை முடித்துக்கொள்வோம்" என்றார்.

மேலும் படிக்க | சபாநாயகர் அப்படி பேசியிருக்கக்கூடாது, அவரால் தான் வெளியேறினேன் - ஆளுநர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News