BJP on 1 vote: ட்ரோல் செய்யப்பட்ட கட்சி தொண்டர் சுயோட்சை வேட்பாளர்-அண்ணாமலை

"ஒரு வாக்கு" பெற்றதற்காக ட்ரோல் செய்யப்பட்ட கட்சித் தொண்டரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டினார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2021, 06:51 PM IST
  • உள்ளாட்சி தேர்தலில் ஒற்றை வாக்கு வாங்கிய கார்த்திக்
  • பாஜக உறுப்பினர்
  • ஆனால் சுயேட்சை வேட்பாளர்!
BJP on 1 vote: ட்ரோல் செய்யப்பட்ட கட்சி தொண்டர் சுயோட்சை வேட்பாளர்-அண்ணாமலை title=

சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு "ஒரு வாக்கு" பெற்ற பாஜக உறுப்பினர் மற்றும் செயல்பாட்டாளர், சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த வேட்பாளர் (பாஜக உறுப்பினர் மற்றும் செயல்பாட்டாளர் என்றாலும்) சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தனது பெயரைப் பயன்படுத்தி வாக்குகள் கேட்டார். அவர் தனது கடின உழைப்பையும் மக்களுக்கான சேவையையும் தொடர்ந்தால், எதிர்காலத்தில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட முடியும் என்று தெரிவித்தார். 

கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் "ஒற்றை வாக்கு" பெற்ற பா.ஜ.க -வின் செயல்பாட்டாளரான டி.கார்த்திக் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். ஆளும் கட்சியான திமுக, மற்றும் அவர்களின் தொண்டர்களால் அதிக அளவு கிண்டல் செய்யப்பட்ட வேட்பாளராக மாறினார் கார்த்திக்.

பாஜக வேட்பாளர் ஒரு வாக்கை மட்டுமே பெற்றார் என்று செய்தி வைரலானது. பாஜகவை "ஒற்றை வாக்கு கட்சி" என்று குறிப்பிட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி ஹேஷ்டேக்குகளும் அகில இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்ட்களாகின.

Also Read | திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது: EPS-OPS கூட்டறிக்கை

அதுமட்டுமல்ல, பாஜக வேட்பாளர் கார்த்திக் தனது ஐந்து குடும்ப உறுப்பினர்களின் வாக்குகளைக் கூட பெறவில்லை என்ற செய்தியும் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் நான்கில் வெற்றி பெற்ற பாஜகவை இலக்காகக் கொண்டு செய்திகள் வைரலாகின. ஜீ மீடியாவிடம் பேசிய பேசிய கார்த்திக், இந்த தகவல் "முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது" என்று கூறினார்.

"நிச்சயமாக, எங்கள் குடும்பத்திற்கு ஐந்து வாக்குகள் இருந்தன, அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் 9 வது வார்டில் போட்டியிட்டேன், எங்கள் வீடு 4வது வார்டில் இருக்கிறது. எங்கள் வாக்குகள் அனைத்தும் 4 வது வார்டில் இருக்கும்போது, பொய் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. நான் பாஜக வேட்பாளர் என்பது முற்றிலும் தவறானது. நான் ‘கார்’ சின்னத்தைப் பயன்படுத்தி சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டேன். எங்கள் கூட்டணி கட்சியான அதிமுக 9 வது வார்டில் தங்கள் வேட்பாளரை நிறுத்தியது, அதனால் பாஜக சார்பில் என்னால் போட்டியிட முடியவில்லை, எனவே நான் சுயேட்சையாக போட்டியிட விரும்பினேன். பாஜக கொடியையோ அல்லது சின்னத்தையோ நான் பயன்படுத்தவில்லை, ஒரு சில நண்பர்களுடன் பிரச்சாரம் செய்தேன், நான் முற்றிலும் புதிய ஒரு வார்டில் போட்டியிட்டேன். இந்த விஷயத்தில் என் கட்சியை ஒற்றை வாக்கு கட்சி என்று சொல்வது மிகவும் தவறு”என்று அவர் தெளிவுபடுத்தினார்.

புதிய, அறிமுகமில்லாத சின்னங்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் இப்படி நடப்பத்தில்லையே என்று கேட்டதற்கு பதிலளிக்கும் அவர், தான், வார்டு மக்களுக்கு முற்றிலும் தெரியாதவர் என்று சொன்னார். அதுமட்டுமல்ல, கார்த்திக்கின் தாயார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததால் தன்னால், சில மணிநேரங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

bjp

"பிரச்சாரத்தின் போது விநியோகிப்பதற்காக நான் சுமார் 1000 துண்டு பிரசுரங்களை அச்சிட்டேன், அவற்றில் 900க்கும் மேற்பட்டவை என் வீட்டில் உள்ளன. அம்மா மருத்துவமனையில் இருக்கும்போது என்னால் எப்படி பிரசாரத்தில் ஈடுபட முடியும்?" என்று கார்த்திக் எதிர்கேள்வி கேட்கிறார்.
 
இந்த பிரச்சனை குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேலும் கூறுகையில், கட்சிக்கும் அதன் தொண்டருக்கும் எதிராக பரப்பப்படும் போலி செய்திகளைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்று சொல்கிறார். "அவர் ஒரு இளைஞர், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். ஒரு கட்சியாக, எங்கள் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம். நாங்கள் அவரை ஊக்குவிப்போம், ஒரு நாள் அவர் பாஜக சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட்டு வெற்றி பெறலாம் ”என்று அவர் மேலும் கூறினார்.

தனது கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் இளைஞர் அணித் தலைவர் வினோஜ் பி செல்வம் ஆகியோர் தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் சொன்னதாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஒரு வாக்கு மட்டுமே பெற்ற கார்த்திக் சொல்கிறார். "எனக்கு அவர்களின் வார்த்தைகள் ஆதரவாக இருக்கிறது. இனிமேல், மும்மடங்கு கடினமாக உழைப்பேன்" என்று அவர் மேலும் கூறினார்.

Read Also | அடுத்து நான்கு நாட்களுக்கு அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை -முழுவிவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News