சேலம் கோவில் கும்பாபிஷேகத்தில் முதலமைச்சர் பங்கேற்ப்பு...

சேலம் எடப்பாடியில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பங்கேற்று சாமி தரிசனம்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2018, 12:34 PM IST
சேலம் கோவில் கும்பாபிஷேகத்தில் முதலமைச்சர் பங்கேற்ப்பு... title=

சேலம் எடப்பாடியில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பங்கேற்று சாமி தரிசனம்...! 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் பூனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சொந்த தொகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். 

அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊர்வலமாக எடுத்துவந்து சிறப்பு பூஜைகளுடன் கலசங்களில் கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, அங்கு திரண்டு தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

 

Trending News