சீன அதிபர், பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் தங்க உள்ளார். அதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 4, 2019, 07:24 PM IST
சீன அதிபர், பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் title=

சென்னை: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை வர உள்ளார். அவரின் வருகையொட்டி சென்னை முழுவதும் பாதுக்காப்பு பலப்படுத்தபட உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க பிரதமர் மோடியும் சென்னை வருகை தர உள்ளார். சீன அதிபரின் இந்த சுற்றுப்பயணத்தில்  இந்தியா மற்றும் சீனா இடையே பல வர்த்தக உறவு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளது. 

2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் தங்க உள்ளார். அதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விமானபடை, கடற்படை, உளவு பிரிவை அதிகாரிகள், சென்னை காவல் ஆணையர், டிஜிபி மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

சீன அதிபர் ஜி ஜின்பிங் 11 ஆம் தேதி சென்னை வர உள்ளதால், சென்னை விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரம் வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி மேற்கொள்வது என்றும், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபருக்கு அளிக்கப்படும் வரவேற்ப்பை குறித்தும், 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியை வரவேற்று வழியில் பேனர்கள் வைக்க அனுமதி தரவேண்டும் என சென்னை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்கள் வைத்துக்கொள்ளலாம், அதேவேளையில் பேனர் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனக்கூறி பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News