தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம்

Last Updated : May 4, 2017, 10:36 AM IST
தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் title=

தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கிறது. இந்த காலம் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரி வெயிலின் காலத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

கத்திரி வெயிலின் காரணமாக தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது. உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. இதே நிலை அடுத்து வரும் 3 நாட்களுக்கு தொடரும். ஆனால் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுதவிர, திண்டுக்கல், விருதுநகர், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் ஓறிரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Trending News