இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை: எத்தனை பேர் நிராகரிக்கப்படுவார்கள்?

இன்று காலை 11 மணி முதல் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 27, 2019, 08:23 AM IST
இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை: எத்தனை பேர் நிராகரிக்கப்படுவார்கள்? title=

தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரிஒரு பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதே சமயம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கியது. இடையில் சனி, ஞாயிறு வந்ததால் மொத்தம் ஆறு நாட்கள் வேட்புமனு தாக்குதல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தை பொருத்த வரை 39 மக்களவை தொகுதியில் 1,236 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 1,098 பேர், பெண்கள் 136 பேர் மற்றும் 2 திருநங்கைகளும் அடங்குவர். அதேபோன்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 488 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 413 பேரும், 75 பேர் பெண்களும் அடங்குவர். 

இதனையடுத்து இன்று காலை 11 மணி முதல் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுத் திரும்ப பெரும் கடைசி நாள் மார்ச் 29 ஆகும். அன்றே இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

தமிழகம், புதுவையில் வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளததால், இன்று முதல் அனல் பறக்கும் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News