’தலைவா... தங்கமே... கொடை வள்ளலே’ - கேப்டன் விஜயகாந்துக்காக குவியும் ரசிகர்கள்

கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு ரசிகர்கள் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 28, 2023, 07:41 PM IST
  • விஜயகாந்துக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
  • கோயம்பேட்டில் குவியும் ரசிகர்களின் கூட்டம்
  • காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முடியாமல் திணறல்
’தலைவா... தங்கமே... கொடை வள்ளலே’ - கேப்டன் விஜயகாந்துக்காக குவியும் ரசிகர்கள் title=

தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு சென்று வந்தார். டிசம்பர் 16 ஆம் தேதியும் அப்படியான பரிசோதனைக்கே மியாட் மருத்துவமனைக்கு கேப்டன் விஜயகாந்த் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் நுரையீரல் அழற்சி காரணமாக இன்று காலை 6.10 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது. 

மேலும் படிக்க | மருத்துவர்கள் சொல்லியும் கேட்காமல் 2016 -ல் பிரச்சாரத்துக்கு சென்ற விஜயகாந்த்

இதனையடுத்து சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல் ரசிகர்களின் அஞ்சலிக்காக கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு பெண்மணி, " தங்கமே... என் குலதெய்வமே எங்களை விட்டுவிட்டு போக உனக்கு மனசு எப்படி ராசா வந்தது?" என கண்ணீரோடு கதறினார். மற்றொருவர் உன்னைபோல இன்னொரு மனுஷன நாங்க எப்ப பாக்கப்போறோம்னு தெரியலையே என அழுதார்.

கொடுத்து கொடுத்து பழக்கப்பட்ட கை இப்போது ஓஞ்சிப்போச்சே என வயதான பெண் நெஞ்சுருக விஜயகாந்துக்காக அழுதார். அவரின் ஒப்பாரியை பார்த்து அங்கு குழுமியிருந்தவர்களும் கண்கலங்கினர். இன்னொருபக்கம் சென்னை கானா பாடகர்கள் குழுவாக சேர்ந்து பாடி விஜயகாந்துக்காக அஞ்சலி செலுத்தினர். திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுடப் குழுவினர் உள்ளிட்ட பலரும் தேமுதிக அலுவலகம் முன்பு குழுமி விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர். திரைப்பட நடிகர் கூல் சுரேஷ் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தபோது விஜயகாந்த் அவர்களுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

நாளை மாலை இறுதிச் சடங்கு நடைபெறுவதால் வேலைக்கு சென்று திரும்பியவர்கள், வெளியூர்களில் இருக்கும் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கோயம்பேடு பகுதியில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர். இதனால் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் விஜயகாந்துக்காக கண்ணீர் மல்க ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்துவதை பார்க்கும்போது கண்கள் குளமாகின்றன.

மேலும் படிக்க | விஜயகாந்த் அரசியல் வாழ்வின் திருப்பம்... மண்டபம் இடிப்பு - தேமுதிக அலுவலகம் உருவான கதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News