வாணியம்பாடி கோர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்.. 5 பேர் பலி

Bus Accident In Tamil Nadu: வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேரு மோதி விபத்து. இதில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் படுகாயம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 11, 2023, 09:16 AM IST
வாணியம்பாடி கோர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்.. 5 பேர் பலி title=

Vaniyambadi Bus Accident: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலை பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து காரணமாக சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு கிராமிய போலீசார் விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 64 பேர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி பலியான அரசு பேருந்து ஓட்டுநர் உளுந்தூர் பேட்டையை பகுதியை சேர்ந்த ஏழுமலை, வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த முஹம்மத் பைரோஸ் (தனியார் சொகுசு பேருந்து நடத்துநர், வாணியம்பாடி பைபாஸ் பேருந்து நிலையத்தில் ஏரியவர்), சித்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார், கோலர் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான முகமது நதீம், மற்றும் சென்னையை சேர்ந்த கிருத்திகா என்ற பெண் உட்பட 5 பேர் சடலங்கலை மீட்டு பிரதி பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க - ’திருட்டு போலீஸ்’ தட்டி தூக்கிய நிஜ போலீஸ் - சிறையில் கம்பி எண்ணுகிறார்..!

விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் திரைமலதா நகர கழக செயலாளர் சாரதி குமார் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி கூறிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு கேட்டுக்கொண்டனர்.

மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த  கிருத்திகா தனது இருகுழந்தைகளுடன் பெங்களூரில் இருந்த சென்னை சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இரு குழந்தைகளும் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க - ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை: அபராதம் ரூ.1768 மட்டும்தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News