மதுரையில் என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை!

மதுரையில் பிரபல ரவுடிகள் இரண்டு பேர் காவல் துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.

Last Updated : Mar 1, 2018, 06:09 PM IST
மதுரையில் என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை! title=

மதுரையில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் என்ற பிரபல ரவுடிகளை காவல் துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இவர்கள் கொலை, கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அத்துடன் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளது. 

இந்நிலையில் மதுரையில் ரவுடிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பெரும் அச்சடமடைந்துள்ளனர். இதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்த போலீஸார், ரவுடிகளை கைது செய்ய சென்றனர். அப்போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மதுரை சிக்கந்தர்சாவடியில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை என்கவுண்ட்டர் செய்துள்ளனர். 

போலீஸார் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக வேறு வழியின்றி ரவுடிகளை சுட்டுக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பதட்ட நிலை ஏற்பட்டாலும், பொதுமக்கள் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending News