சுரங்க மெட்ரோ சேவை: முதல்வர், மத்திய மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Last Updated : May 14, 2017, 11:43 AM IST
சுரங்க மெட்ரோ சேவை: முதல்வர், மத்திய மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். title=

திருமங்கலம் - நேரு பூங்கா இடையேயான சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. மெட்ரோ ரயில் சேவையை மத்திய மந்திரி வெங்கய்ய நாயுடும் முதல்-அமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் மெட்ரோ ரயில் சேவை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 45 கிமீ தூரம் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ பாதைகள் அமைக்கப்படுகின்றன. 

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்த்தை மத்திய மந்திரி வெங்கய்ய நாயுடு கொடியசைத்து மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

நேரு பூங்கா முதல் கோயம்பேடு வரை சுமார் 8 கிமீ தூரம் இந்த சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க வழித்தடத்தில், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 ரெயில் நிலையங்கள் வருகின்றன. சுரங்க ரயிலில் பயணிக்கும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் மெட்ரோ துறையினரால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Trending News