வீடியோ: கோவை சாலையில் ஹாயாக வளம் வரும் யானை!

தற்போது மீண்டும் அதே பகுதியினில்  மற்றொரு யானை, இரவில் தனியாக வளம் வரும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 13, 2017, 05:35 PM IST
வீடியோ: கோவை சாலையில் ஹாயாக வளம் வரும் யானை! title=

சமீப காலமாக கோவை மாநகரில் யானைகள் ஜாலியாக வளம் வருவது வழக்கமாகி வருகின்றது.

முன்னதாக, கடந்த டிச., 2-ஆம் நாள் கோயம்புத்தூரின் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பெண் யானை ஒன்று தன்னுடைய குட்டியுடன் உணவு தேடி யாரும் இல்லத வீட்டிற்குள் நுழைந்தது.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த அந்த இரண்டு யானைகளும் உணவு இல்லை என்று தெரிந்தவுடன் சேதம் ஏதும் ஏற்படுத்தாமல் அமைதியா திரும்பி சென்றுவிட்டது.

எனினும், இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியினில்  மற்றொரு யானை, இரவில் தனியாக வளம் வரும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Trending News