விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 28, 2023, 03:46 PM IST
  • விஜயகாந்த் சோர்ந்து போனது எப்போது?
  • அவருடைய மகன் சண்முக பாண்டிய விளக்கம்
  • ஏமாற்றத்தால் வீழ்த்தப்பட்ட விஜயகாந்த்
விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல் title=

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு அருமையான நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் தனது திரைத்துறை வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்டதோடு, தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என கூறாமல் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்தார். அத்துடன் 2005 ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய அவர், அடுத்த ஆண்டு நடைபெற்ற அதாவது 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலியே விருத்தாசலம் தொகுதியில் நின்றுவெற்றி பெற்றார். அடுத்தடுத்து தேர்தலிலும் வெற்றி பெற்ற விஜயகாந்த், அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்தார். ஆனால், அதே அளவுக்கு அவரது அரசியல் வாழ்க்கையில் சில சோதனைகளையும் அவர் சந்தித்துள்ளார். 

மேலும் படிக்க | விஜயகாந்த் ராசி எண் இதுவா?.. விருத்தாச்சலம் தொகுதியை இதுக்கு தான் தேர்ந்தெடுத்தாரா?

அவற்றில் ஒன்றுதான் 2012 ஆம் ஆண்டு அதிமுகவுடன் இணைந்த தேமுதிக கூட்டணி உடைந்தது. இந்த கூட்டணி உடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்வுக்கும் இடையே ஏற்பட்ட மோதல். சட்டமன்றத்திலேயே விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா காரசாரமான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். நாக்கை கடித்து அதிமுக எம்எல்ஏக்களை மிரட்டினார் விஜயகாந்த். இந்த மோதல் காரணமாக, தேமுதிகவில் இருந்து பல எம்எல்ஏக்கள் விலகி விஜயகாந்துக்கு எதிராக சட்டமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டனர். இந்த எம்எல்ஏக்களில் சிலர் விஜயகாந்தின் நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் விஜயகாந்தை மிகவும் மனம் உடையச் செய்தது. அவர் தனது மகன் சண்முகபாண்டியனிடம், "என் மீது நம்பிக்கை வைத்து தேமுதிகவில் சேர்ந்தவர்கள், என்னை விட்டு விலகிச் சென்றது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜயகாந்த் உடல்நலம் குன்றி அரசியல் வாழ்க்கையில் மிக தீவிரமாக ஈடுபட முடியாமல் போனது. 

அத்துடன் தேமுதிகவின் மக்கள் ஆதரவு குறைந்து, கட்சியின் நிலைமை மோசமடைந்தது. விஜயகாந்த் தனது அரசியல் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தாலும், அவர் ஒருபோதும் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் எப்போதும் மக்களுக்காக உழைக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தயாராக இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை கடைசி வரை ஒத்துழைக்கவே இல்லை. 

மேலும் படிக்க | தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News