தமிழ்நாடு பட்ஜெட் எப்போது தாக்கல்? என்னென்ன அறிவிப்புகள் வெளியாகிறது?

Tamil Nadu budget: தமிழ்நாடு பட்ஜெட் டிசம்பர் 19, திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் நிலையில், அதில் என்னென்ன திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 18, 2024, 11:50 PM IST
  • தமிழ்நாடு பட்ஜெட் திங்கட்கிழமை தாக்கல்
  • அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்
  • 7 அம்சங்கள் அடிப்படையில் தாக்கலாகிறது பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட் எப்போது தாக்கல்? என்னென்ன அறிவிப்புகள் வெளியாகிறது? title=

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்

2024 - 25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவர் பேரவையில் வந்து அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுவதுமாக வாசித்தார். இது தொடர்பான சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

மேலும் படிக்க | பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

எப்போது தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்?

தமிழ்நாடு பட்ஜெட் பிப்ரவரி 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனையொட்டி “தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அத்துடன் பட்ஜெட் அறிவிப்பு தொடர்பான அம்சங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் அம்சங்கள் என்ன?

தமிழ்நாடு பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், 2024 - 25 ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் மொத்தம் 7 அம்சங்கள் கொண்ட தலைப்பில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மாபெரும் 7 தமிழ் கனவுகள் என்று பட்ஜெட் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சமூகநீதி, கடைகோரி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இணைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலன், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளின் அடிப்படையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் எப்போது? 

பிப்வரி 20 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், அன்றைய தினமே மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன், பட்ஜெட் குறித்த பொதுவிவாதம் நடைபெறுகிறது. பிப்ரவரி 21 ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்க உள்ளனர். நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பாஜக வெற்றி பெறாமல் தடுக்க இதை செய்ய வேண்டும் - டிஆர் பாலு சொல்லும் ஐடியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News