தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 5, 2021, 03:50 PM IST
  • இன்னும் ஓரிரு நாட்களில் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு.
  • தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது.
  • கொரோனா தொற்று சூழ்நிலைக் காரணமாக தேர்தலுக்கு தயாராக இல்லை: மகாராஷ்டிரா அரசு
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிப்பு title=

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் (ECI) வெளியிடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை மூன்று இடங்கள் காலியாக உள்ளது. அதிமுக-வை சேர்ந்த முஹம்மது ஜான், வைத்திலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் முஹம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். மேலும் மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர்களாக இருந்த வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி  இருவரும் நடந்துமுடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மாநிலங்களவை பதவியை அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 

தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளதால், விரைவில் தேர்தல் நடந்தப்பட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அடுத்து தமிழக தேர்தல் ஆணைத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) கருத்து கேட்டு இருந்தது. 

ALSO READ |  மேகதாது அணை விவகாரம்; தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி பயணம்

திமுக மற்றும் காங்கிரஸ்:
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் (Rajya Sabha Election Date) அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத்தகவல் வெளியாகி உள்ளது. 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றால், இந்தமுறை மூன்று இடங்களும் திமுக வசம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் திமுக (DMK Rajya Sabha Seats) சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படும். இந்த மூன்று இடங்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் யார் நிறுத்தப்படுவார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதிமுக மாநிலங்களவை பதவி காலம் எப்பொழுது முடிவடைய இருந்தது:

1. முஹம்மது ஜான்: நான்கு ஆண்டுகள்
2. வைத்திலிங்கம்: ஓராண்டு 
3. கேபி முனுசாமி: ஐந்து ஆண்டுகள்

ALSO READ |  ‘மாநிலங்களவையில் இன்று நடந்தது துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது’

மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ள மாநிலங்கள் விவரம்:

1 தமிழ்நாடு (3)
2. மேற்கு வங்கம் (2)
3. அஸ்ஸாம் (1)
4. மகாராஷ்டிரா (2)

மகாராஷ்டிரா தேர்தலுக்கு தயாராக இல்லை: 
தற்போது மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று சூழ்நிலைக் காரணமாக தேர்தலுக்கு தயாராக இல்லை என மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் இடைத்தேர்தல் நடத்த தயார் என அறிவித்துள்ளன. 

ALSO READ |  கொரோனா ஒழியவில்லை; மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News