ஆர்.கே.நகரில் வெற்றிக்கொடி நாட்டப் போவது யார்?

நாளை மறுநாள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை.    

Last Updated : Dec 22, 2017, 02:06 PM IST
  • வாக்குப்பதிவு விபரம்:-
  • ஆண்கள் - 84195,
  • பெண்கள் - 92862,
  • மற்றவர்கள் - 17,
  • மொத்தம் - 177074.
ஆர்.கே.நகரில் வெற்றிக்கொடி நாட்டப் போவது யார்?  title=

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 258 வாக்குச்சாவடிகளில், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 மணிக்கு பின் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று 77.68% வாக்கு பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பின்னர் வாக்கு இயந்திரத்தை சீல் செய்து பாதுகாப்பாக எடுத்து சென்றனர். 

இதில், ஆண்கள் - 84195, பெண்கள் - 92862, மூன்றாம் பாலினம் - 17, மொத்தம் - 177074 நபர்கள் வாக்களித்தனர். 

ஆர்.கே.நகர் இடை தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர் போட்டியிட்டனர். இதில் யாருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்கின்றனர். வருகின்ற 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

Trending News