ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா?

சட்டப்பேரவையில் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2022, 05:55 PM IST
  • ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திடீர் போராட்டம்
  • வீதிக்கு வந்து போராடிய மக்கள்
  • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா?  title=

திமுக அரசு அமைந்து மே 7-ம் தேதியுடன் ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

2018-ம் ஆண்டு மே 22-ம் தேதியைத் தமிழகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடாது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டியதால் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது அதிமுக அரசை அசைத்துப் பார்த்தது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று அனுமதி கோரி வேதாந்த குழுமம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி பாத்திமா நகரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திடீர் போராட்டம் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 

மேலும் படிக்க |  மானிய கோரிக்கை விவாதத்திற்காக மே 10 வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர்

ஸ்டெர்லைட்டின் பொய் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித் த மக்கள் வீதிக்கு வந்து போராடினர். “நாங்கள் 13 உயிர்களை காவு கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிறுத்தியுள்ளோம்” என்று உரிமைக் குரல் கொடுத்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஸ்டெர்லைட் நச்சாலையை மீண்டும் திறப்பதற்காக வேதாந்தா நிறுவனம் பல்வேறு குறுக்கு வழிகளில் முயன்று வருவதும், பணத்தை வாரியிறைத்து, ஆலைக்கு ஆதரவாகக் கருத்துருவாக்கத்தையும், செயற்கையாக ஒரு அணி திரட்டலையும் உருவாக்க முயன்று வருவதுமான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வேதாந்தா நிறுவனத்தின் சூழ்ச்சிக்கெதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்தியும் தூத்துக்குடி, பாத்திமா நகர் மக்கள் தன்னெழுச்சியாகக் கூடி நடத்திய போராட்டம் குறித்தான செய்தியறிந்தேன். 

அப்போராட்டத்தை முழுமையாக நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது. அம்மக்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. தமிழர்களின் உயிரைக் குடித்து, சூழலைக் கெடுத்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றை மனநிலையாக இருக்கிறது.

ஆகவே, மண்ணின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வேதாந்தா குழுமத்தின் சதிச்செயலை முறியடிக்கும் விதமாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டமியற்ற வேண்டுமெனவும், ஆலையை அரசுடைமையாக்கி, காப்பர் தயாரிக்கும் உலைகளை முழுமையாகச் செயலிழக்க செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு அமைந்து மே 7-ம் தேதியுடன் ஓராண்டு முடிவடைய உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க |  நில அபகரிப்பு வழக்கு : ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

 

Trending News