மீண்டும் லாக்-டவுன் வருமா! அரசு சொல்வது என்ன?

இனி வரும் நாட்களில் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jan 28, 2022, 03:26 PM IST
  • 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து நேரடி வகுப்பு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • திரையரங்குக்கு 100% பார்வையாளர் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் லாக்-டவுன் வருமா! அரசு சொல்வது என்ன?  title=

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு (Night Curfew) மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டன.  அதற்கு முன்னர் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும், கோயில்களுக்கு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.  தற்போது இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  

ALSO READ | Lockdown: கல்லூரித் தேர்வுகள் ஆன்லைனில்! வகுப்புகள் ஆஃப்லைனில்...

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து நேரடி வகுப்புகளும், கொரோனா (Corona) பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரியை தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முழுநேரம் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  உணவகங்கள், விடுதிகள், சலூன்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்றவை 50% நபர்களைக் கொண்டு செயல்படலாம்.  

பொங்கல் பண்டிகை தினத்தில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதால் திரையரங்குக்கு 100% பார்வையாளர் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுதும் 50 சதவீதம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  முதல் அலை மற்றும் இரண்டாவது அலையைத் ஒப்பிடும்போது மூன்றாவது அலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் மிகவும் குறைந்த அளவே உள்ளது.  எடுத்துக்காட்டாக இரண்டாவது அலையில் 3000 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை தற்பொழுது 300 ஆக மட்டுமே உள்ளது.  

இறப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், மக்களின் இயல்பு வாழ்க்கையை கருத்தில் கொண்டும் தற்போது ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் இருந்து கூறப்படுகிறது.  இருப்பினும் சமூக இடைவெளியை பின்பற்றி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.  அதேபோல தடுப்புஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் விரைவில் செலுத்திக் கொண்டாள் இனி வரும் நாட்களில் ஊரடங்கு போடுவதற்கான தேவை இருக்காது என்றும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ALSO READ | தமிழகத்தில் ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு - முழுவிவரம் இதோ..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News