டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு

டிசிஎஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பீடு 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது.  

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 23, 2018, 02:37 PM IST
டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு title=

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவைகள் ஏற்றுமதியாளரான டிசிஎஸ் லிமிடெட்டின் சந்தை மூலதனத்தில் $100 பில்லியனை எட்டியதன் மூலம் புதிய சாதனை செய்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) மட்டும் 4.4 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் மதிப்பு ரூ. 3,545 ஆக உள்ளது. 

கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டின் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 6925 கோடி ஆகும். இதற்கு முந்தைய நிதியாண்டின்( கால் இறுதி ஆண்டுடன் ஒப்பிடுக்கையில் லாபம் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

இதனால் பங்குதாரர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் 1:1 போனஸ் அறிவித்துள்ளது. இது முதல் முறை அல்ல, ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் 1:1 போனஸ் பங்குதாரர்களுக்கு வழங்கியது.இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 675,934.95 கோடி ரூபாய் ஆகும்.

Trending News