99 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம்!

Last Updated : Aug 20, 2017, 10:14 AM IST
99 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம்! title=

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 

இந்த சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நி.மி., வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும்.

இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். இந்நிலையில் முழு சூரிய கிரகணம் நாளை ஆகஸ்டு 21-ம் தேதி தோன்றுகிறது.

மேலும் இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதேவேளை, சூரிய கிரகணத்தைப் படம்பிடித்து நேரலையில் காண்பிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில், கமராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை பறக்க விட அமெரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

முதல் முறையாக இந்தக் காட்சி இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது.

அமெரிக்காவில் முழுமையாக காணக்கூடிய வகையில் ஏற்படும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அரைவாசியாக தென்படும்.

Trending News