இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்... 26 கி.மீ., மைலேஜ் கிடைக்கும் - அட்டகாசமான விலை விவரம் இதோ!

Best Mileage 7 Seater Cars: 7 இருக்கைகள் கொண்ட மாருதி சுசுகி எர்டிகா மாடல் கார் ஆனது, நல்ல மைலேஜை கொடுக்கும். அந்த கார் குறித்தும், அதன் அம்சங்கள் குறித்தும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 7, 2023, 09:56 PM IST
  • MPV பிரிவில் எர்டிகா ஆதிக்கம் செலுத்துகிறது.
  • இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் MPV இதுதான்.
  • இதில் பல அம்சங்களும் உள்ளன.
இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்... 26 கி.மீ., மைலேஜ் கிடைக்கும் - அட்டகாசமான விலை விவரம் இதோ! title=

Best Mileage 7 Seater Cars: வாடிக்கையாளர் ஒருவர் 7 இருக்கைகள் கொண்ட காரை வாங்க நினைக்கும் போது, மைலேஜ் குறித்த கேள்வியும் அவரது மனதில் எழும், அதனை தவிர்க்க இயலாது. பொதுவாக, 7-சீட்டர் கார்கள், 5-சீட்டர் கார்களை விட பெரியவை மற்றும் ஒப்பீட்டளவில் பெரிய இயந்திரங்களைக் கொண்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததுதான். 

அத்தகைய சூழ்நிலையில், மைலேஜ் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆனால், இந்திய கார் சந்தையில் 7-சீட்டர் கொண்ட கார் உள்ளது, இது 26 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். அது வேறு ஒன்றும் இல்லை மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மாடல் கார்தான் அது. மாருதி சுசுகி எர்டிகா அதன் மைலேஜுக்கு பிரபலமானது மட்டுமல்ல, அதன் அத்தியாவசிய அம்சங்கள் மற்றும் குறைந்த விலையில் நம்பகத்தன்மைக்கும் மிகவும் பெயர் பெற்றது. MPV (Multiple Purpose Vechicle) பிரிவில் மாருதி சுசுகி எர்டிகா ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் MPV இதுதான்.

மேலும் படிக்க | கார் வாங்க திட்டமா... ரூ. 2 லட்சம் வரை பம்பர் தள்ளுபடி - உண்மை தான் உடனே பாருங்க!

பெட்ரோல் மற்றும் CNG

மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 1.5 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சினுடன் சிஎன்ஜி கிட் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் பெட்ரோலில் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜையும், சிஎன்ஜியில் 26.11 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. 

இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தரநிலையாக உள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் வகைகளில் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பமும் உள்ளது. இந்த எஞ்சின் பெட்ரோலில் 103 பிஎஸ் பவரையும், 136.8 என்எம் பவரையும், 88 பிஎஸ் பவரையும், சிஎன்ஜியில் 121.5 என்எம் பவரையும் உருவாக்குகிறது.

முக்கிய அம்சங்கள்

இதில் 7-இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் (Telematics), க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ ஏசி, பேடில் ஷிஃப்டர்கள், 4 ஏர்பேக்குகள், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் இதில் அடங்கும். 

காரின் விலை

மாருதி சுசுகி எர்டிகாவின் விலை ரூ.8.64 லட்சத்தில் தொடங்கி ரூ.13.08 லட்சம் (Excluding Showroom) வரை செல்கிறது. ஆனால், அதன் சிஎன்ஜி மாடலின் விலை ரூ.10.73 லட்சம் முதல் ரூ.11.83 லட்சம் வரை உள்ளது.

மேலும் படிக்க | கார் டயரில் இதை கவனிச்சா உடனே மாத்துங்க... மைல்லேஜ் கிடைக்காது, ஆபத்தும் அதிகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News