32 இன்ச்சில் நச்சுனு ஸ்மார்ட் டிவி வாங்கலாம்... அதுவும் ரூ.15 ஆயிரத்துக்கும் கம்மியா - லிஸ்ட் இதோ!

Smart TV In Amazon Sale 2023: 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை இப்போது ரூ. 15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனையில் வாங்கலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 31, 2023, 08:55 AM IST
  • ஸ்மார்ட் டிவிகளின் பிரபல ஓடிடி தளங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • தள்ளுபடி விற்பனை அதன் இறுதிகட்டத்தில் உள்ளன.
  • சில வங்கி கார்டுகளுக்கு தள்ளுபடி உள்ளது.
32 இன்ச்சில் நச்சுனு ஸ்மார்ட் டிவி வாங்கலாம்... அதுவும் ரூ.15 ஆயிரத்துக்கும் கம்மியா - லிஸ்ட் இதோ! title=

Smart TV In Amazon Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனை அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த கடைசி நாள்களின் அமேசான் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் போன்ற மின்சாதனங்கள் மீது பெரும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. 

அந்த வகையில், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பலரும் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய டிவியை ஓரம்கட்டிவிட்டு, புத்தம்புதிய டிவியை வாங்க வேண்டும் என நினைப்பார்கள். எனவே, வரும் தீபாவளியில் உங்கள் வீடு அல்லது பணியிடத்தில் நீங்கள் புதிய டிவியை வாங்க நினைத்தால், அமேசான் விற்பனையில் கிடைக்கும் பல சிறந்த சலுகைகள் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பலரும் ஸ்மார்ட் டிவியைதான் எதிர்பார்க்கின்றனர்.  

அமேசான் விற்பனையில் குறைந்த விலையில் பல அற்புதமான ஸ்மார்ட் டிவிகளை நீங்கள் வாங்கலாம். 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவிகளையும், அதன் சிறப்பம்சங்களையும் இதில் காணலாம். 

மேலும் படிக்க | ஒரு லட்சம் ரூபாய் விலையில் ஒன்பிளஸ் மொபைல்...! அப்படி என்ன இருக்குனு கேக்றீங்களா?\

ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி

LG 32 Inch HD Ready Smart LED TV 

LG நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியின் அசல் விலை 30,990 ஆகும். ஆனால் அமேசான் விற்பனையில் இந்த டிவிக்கு 56 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதனால், நீங்கள் அதை வெறும் 13,490 ரூபாய்க்கு வாங்கலாம். மாதத் தவணை ஆப்ஷனை பார்த்தால், மாதம் 654 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன. 

OnePlus 32 Inch Y Series HD Ready LED Smart Android TV

OnePlus நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவியை அமேசான் தள்ளுபடியில் 13,999 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அசல் விலை 19,999 ரூபாய் ஆகும். ஆனால் தற்போதைய தள்ளுபடி விற்பனையில் இந்த டிவிக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்கள் மூலம் இந்த டிவி வாங்கினால் 1500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். மாதத் தவணை ஆப்ஷனை பார்த்தால், மாதம் 679 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன.

VW 43 Inches Playwall Frameless Series Full HD Android Smart LED TV

இந்த டிவியின் அசல் விலை 24,999 ரூபாய். அமேசான் விற்பனையில் டிவியில் 42 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதன் பிறகு நீங்கள் அதை 14,499 ரூபாய்க்கு வாங்க முடியும். இதற்கு மாதத் தவணை ஆப்ஷனை பார்த்தால், மாதம் 703 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன.

Nu 43 Inch Soogle Series 4K Ultra HD LED Smart TV

இந்த ஸ்மார்ட் டிவி அமேசானில் 19,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், விற்பனையின் போது, டிவியை 26 சதவீத தள்ளுபடியுடன் 14,899 ரூபாய்க்கு வாங்கலாம். இதற்கு மாதத் தவணை ஆப்ஷனை பார்த்தால், மாதம் 722 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன.

Samsung 32 Inches Wondertainment Series HD Ready LED Smart TV

இந்த ஸ்மார்ட் டிவியின் விலை அமேசானில் 22,900 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் தற்போது விற்பனையில் 43 சதவீத தள்ளுபடியுடன் 12,990 ரூபாய்க்கு வாங்கலாம். இதற்கு மாதத் தவணை ஆப்ஷனை பார்த்தால், மாதம் 630 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன.

எப்படி வாங்குவது?

அமேசான் தளத்திலோ அல்லது செயலியிலோ மேலே கொடுக்கப்பட்ட உங்களுக்கு ஏற்ற தொலைக்காட்சியை தேர்வு செய்து, கொடுக்கப்பட்டுள்ள முழு பெயரை அதில் டைப் செய்து நீங்கள் அதனை ஆர்டர் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | யூ-ட்யூப்பில் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கணுமா... அப்போ இதை பண்ணுங்க!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News