கேமிங் பிரியரா நீங்கள்... அமேசானில் 40% தள்ளுபடி - இந்த மூன்று லேப்டாப்களை பாருங்க!

Best Gaming Laptop In Amazon Sale 2023: அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்க உள்ள நிலையில், இந்த மூன்று சிறந்த கேமிங் லேப்டாப்களும் சிறந்த தள்ளுபடியில் கிடைக்கின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 2, 2023, 11:08 AM IST
  • அக். 8ஆம் தேதி அமேசான் விற்பனை தொடங்குகிறது.
  • Dell, HP, Acer போன்ற பெரிய பிராண்டுகளும் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
  • பிரைம் வைத்திருப்பவர்களுக்கு விற்பனை அக். 7ஆம் தேதியே தொடங்குகிறது.
கேமிங் பிரியரா நீங்கள்... அமேசானில் 40% தள்ளுபடி - இந்த மூன்று லேப்டாப்களை பாருங்க! title=

Best Gaming Laptop In Amazon Sale 2023: இந்தாண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசானின் இந்த தள்ளுபடி விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு இந்த அமேசான் பிரைம் விற்பனை ஒரு நாள் முன்னாடியே தொடங்கும்.

அதாவது, அவர்களுக்கான விற்பனை அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையில் இதுவும் ஒன்றாக உள்ளது. மேலும் அனைத்து வகையிலான பொருள்களுக்கும் தள்ளுபடி மற்றும் அதிரடி ஆப்பர்கள் வழங்கப்படும். இந்த தள்ளுபடி விற்பனையில் நீங்கள் பணம் செலுத்த பயன்படுத்தும் வங்கிகள் சார்ந்தும் பல ஆப்பர்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளராக இருந்து, எஸ்பிஐ கார்டை அமேசான் விற்பனையில் ஏதேனும் பொருளை வாங்க பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடனடியாக 10% தள்ளுபடியைப் பெறலாம். அதுவரை நீங்கள் சிறந்த கேமிங் லேப்டாப் பிராண்டுகளில் சிறப்பான தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

நீங்கள் ஒரு கேமிங்கல் அதிகம் ஆர்வம் கொண்டவராகவும், கேமிங்காக ஒரு லேப்டாப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த தொகுப்பு உங்களுக்குதான். அமேசானின் இந்த அட்டகாசமான விற்பனையில், HP, Acer, Dell போன்ற உயர்தர பிராண்டுகளின் கேமிங் லேப்டாப்களில் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | வெளிநாடு செல்லும் மாணவர்களே கவனம்... லட்சக்கணக்கில் பணம் பறிபோக வாய்ப்பு!

இந்தாண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த மூன்று கேமிங் மடிக்கணினிகளை இங்கு காணலாம். அந்த மடிக்கணினிகளின் அம்சங்களும், தள்ளுபிடி விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம். 

Dell G15 5520

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் Dell G15 5520 லேப்டாப்பில் 26% வரை தள்ளுபடியில் வழங்குகிறது. Intel Core i5 செயலி மூலம் இந்த லேப்டாப் உங்கள் கேமிங் தேவைகளை வேகத்தை பாதிக்காமல் எளிதாக கையாளும். இந்த லேப்டாப் வலுவான பேட்டரி பேக்கப்புடன் வருவதால் பேட்டரி ஆயுளைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் நீண்ட நேரம் கேம்களை விளையாடலாம். இந்த திரை உங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. இதன் விலை 69 ஆயிரத்து 990 ரூபாயாக உள்ளது. 

Acer Aspire 5

கேமிங் லேப்டாப் ஆன இந்த மாடல், அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் 36% வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த கேமிங் லேப்டாப் 15 அங்குல அகல திரையுடன் வருகிறது மற்றும் கேம்களை விளையாடுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பணிகளை செய்வதற்கும் வசதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. OS - Windows 11 கொண்ட இந்த லேப்டாப் உங்களுக்கு சிறந்த வேகத்தை வழங்குகிறது. 

இதனால் லேப்டாப்பை பயன்படுத்தும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்த லேப்டாப் இரட்டை மின்விசிறிகளுடன் வருகிறது, இது மடிக்கணினி மணிக்கணக்கில் இயங்கினாலும் குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்கிறது. கைரேகை ரீடரின் உதவியுடன், ஒரே ஒரு தொடுதலுடன் நீங்கள் வேகமாக உள்நுழையலாம். இந்த லேப்டாப்பை ப்ளூடூத் மற்றும் வைஃபை இரண்டிலும் எளிதாக இணைக்கலாம். இதன் விலை 52 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். 

HP Victus

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் HP Victus லேப்டாப் 18% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் கீ-போர்டில் லைட்டிங் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளதால், நீங்கள் இருட்டிலும் கூட ஈஸியாக கேம் விளையாடலாம். 16 GB RAM உடன், உங்கள் எல்லா தரவையும் எளிதாகச் சேமிக்கலாம். தடையற்ற கேமிங் அனுபவத்திற்கும் இந்த லேப்டாப் சிரமமில்லாத இணைப்பை வழங்குகிறது. இந்த லேப்டாப் 72 ஆயிரத்து 490 ரூபாயாகும்.

மேலும் படிக்க | உங்கள் இன்ஸ்டா ரீல்ஸ் வைரல் ஆக வேண்டுமா...பணமும் அள்ளலாம்! - இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News