அசத்தும் BSNL.... சைலன்டாக 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம், முழு விவரம் இதோ

நீங்கள் BSNL வாடிக்கையாளராக இருந்தால், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல்லின் இரண்டு புதிய திட்டங்களும் டேட்டா வவுச்சர் திட்டங்களாகும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 14, 2024, 10:11 AM IST
  • பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
  • வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
அசத்தும் BSNL.... சைலன்டாக 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம், முழு விவரம் இதோ title=

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நாட்டின் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜியோ-ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது குறைவான பயனர்கள் இருந்தாலும், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் கொண்டு வருகிறது. BSNL அதன் பயனர்களுக்கு மலிவான மற்றும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலை விரிவுபடுத்தி, நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஒரு திட்டத்தின் விலை ரூ.91 ஆகவும், மற்றொரு திட்டத்தின் விலை ரூ.288 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டுமே பிஎஸ்என்எல் (BSNL Recharge Plans) அறிமுகப்படுத்திய டேட்டா பூஸ்டர் திட்டங்களாகும். அதாவது இந்த இரண்டு திட்டங்களிலும் இணைய டேட்டா வசதி மட்டுமே கிடைக்கும். நீங்கள் அழைப்பு வசதியை பெற விரும்பினால், இந்த இரண்டு திட்டங்களும் உங்களுக்கானவை அல்ல. தற்போது நிறுவனம் இந்த திட்டங்களை சென்னை வட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் மற்ற வட்டங்களில் இவற்றை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இவற்றில் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதா...? பதற்றமே வேண்டாம் - ஆன்லைனில் பெற ஈஸியான வழி இதோ!

பிஎஸ்என்எல்லின் ரூ.91 டேட்டா திட்டம்:
நீங்கள் சென்னை வட்டத்தில் வசிப்பவராக இருந்தால், பிஎஸ்என்எல்லின் (BSNL) இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிஎஸ்என்எல்லின் இந்த ரூ.91 டேட்டா திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில், நிறுவனம் பயனர்களுக்கு 700 எஸ்எம்எஸ் மற்றும் 600 எம்பி இணைய டேட்டாவை வழங்குகிறது. இந்தப் பலனைத் தவிர, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு வேறு எந்தப் பலனும் கிடைக்காது. நீங்கள் இந்தத் ரீசார்ஜ் திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதை எடுக்க, உங்களிடம் வழக்கமான திட்டம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், இது வேறு எந்த டேட்டா திட்டத்திலும் இல்லாத 700 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பிஎஸ்என்எல்லின் ரூ.288 திட்டம்:
பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.288க்கு வரும் மற்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 60 நாட்கள் செல்லுபடியாகும். இதை எடுத்துக்கொண்ட பிறகு தினமும் 2ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும், 40Kbps வேகத்தில் இணைய டேட்டாவைப் பயன்படுத்தலாம். அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்நிலையில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை மட்டும் விரும்பும் பயனர்கள் இந்த புதிய ரூ.91 மற்றும் ரூ.288 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல்லின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்:
பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க | தொடங்கியது அமேசான் திருவிழா... தள்ளுபடியில் கிடைக்கும் 'தெறி' ஸ்மார்ட்போன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News