Hyundai Exter CNG vs Tata Punch CNG: உங்களுக்கு ஏற்ற கார் எது?

Hyundai Exter CNG vs Tata Punch CNG: இரண்டு கார்களில் உங்களுக்கு ஏற்ற கார் எது? இரு கார்களுக்குமான முழுமையான ஒப்பீட்டை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 8, 2023, 05:56 PM IST
  • டாடா பன்ச் சிஎன்ஜி இரட்டை சிலிண்டர் அமைப்புடன் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
  • இது முதலில் Altroz ​​CNG இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த எஞ்சின் சிஎன்ஜி உடன் 103Nm டார்க்குடன் 73.4bhp ஆற்றலை உருவாக்குகிறது.
Hyundai Exter CNG vs Tata Punch CNG: உங்களுக்கு ஏற்ற கார் எது? title=

டாடா பஞ்ச் சிஎன்ஜி: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு டாடா மோட்டார்ஸ் இறுதியாக அதன் பன்ச் எஸ்யூவி -யின் சிஎன்ஜி பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பத்துடன் டாடா அல்ட்ரா சிஎன்ஜி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது டாடாவின் இந்த கார் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் Xtor சிஎன்ஜி உடன் சந்தையில் போட்டியிடும். இந்த இரண்டு கார்களில் உங்களுக்கு ஏற்ற கார் எது? இரு கார்களுக்குமான முழுமையான ஒப்பீட்டை இந்த பதிவில் காணலாம். 

டாடா பன்ச் சிஎன்ஜி நான்கு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ப்யூர், அட்வென்ச்சர், அட்வென்ச்சர் ரிதம் மற்றும் அகாம்ப்லிஷ்ட் ஆகியவை அடங்கும். அதேசமயம் ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி பதிப்பில் எஸ் மற்றும் எஸ்எக்ஸ் என இரண்டு டிரிம்களில் கிடைக்கிறது.

டாடா பஞ்ச் சிஎன்ஜி -யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.10 லட்சத்தில் தொடங்கி ரூ.8.85 லட்சம் வரை இருக்கிறது . Xtor சிஎன்ஜி -இன் விலை ரூ.8.24 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை உள்ளது.

டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராசுக்குப் பிறகு டாடாவின் சிஎன்ஜி வரிசையில் இது நான்காவது சிஎன்ஜி வண்டி ஆகும். அதே நேரத்தில் Xtor கார், Grand i10 NIOS மற்றும் அதற்குப் பிறகு நிறுவனத்தின் மூன்றாவது CNG கார் ஆகும்.

டாடா பன்ச் சிஎன்ஜி இரட்டை சிலிண்டர் அமைப்புடன் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது முதலில் Altroz ​​CNG இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எஞ்சின் சிஎன்ஜி உடன் 103Nm டார்க்குடன் 73.4bhp ஆற்றலை உருவாக்குகிறது. பஞ்ச் சிஎன்ஜி 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் Xtor 1.2L பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. இது சிஎன்ஜி -இல் 69hp பவர் மற்றும் 95.2Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பத்தை மட்டுமே பெறுகிறது.

எக்ஸ்டரில் இரண்டு சிஎன்ஜி சிலிண்டர்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 30-லிட்டர் கொள்ளளவு கொண்டவை. இவை பூட் ஃப்ளோருக்கு தளத்தின் கீழ் வைக்கப்படுகின்றன. ஹூண்டாய் Xtor காரில் 60 லிட்டர் சிஎன்ஜி டேங்க் கிடைக்கிறது.

மேலும் படிக்க | சூப்பர் மைலேஜ் கொடுக்கும் நடுத்தர அளவிலான SUV கார்கள்! இவை இந்தியாவில் டிரெண்டிங்

டாடா பஞ்ச் சிஎன்ஜி காரில் Apple CarPlay மற்றும் Android Auto அமைப்புடன் கூடிய 7.0-இன்ச் ஹர்மன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ, உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவர் இருக்கை, ஒரு சன்ரூஃப், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, ஃபாக் லேம்ப் மற்றும் 15-இன்ச் ஸ்டீல் வீல் ஆகியவை உள்ளன. 

இரட்டை கேமராக்கள், கீலெஸ் என்ட்ரி, 8 இன்ச் டச்ஸ்கிரீன், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், இன்-பில்ட் நேவிகேஷன், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், பல மொழிகளில் குரல் கொண்ட எக்ஸிடெர் சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் ஃபேக்டரி ஃபிட்டட் டேஷ்கேம் - அம்சங்கள் செயல்படுத்தப்பட்ட கட்டளை போன்றவை எக்ஸ்டரில் கிடைக்கின்றன.

டாடா பஞ்ச் காரில் 210 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்குகிறது. அதே சமயம் எக்ஸெட்டர் 391 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது. டாடா பஞ்ச் சிஎன்ஜி மைலேஜ் 26.99 கிமீ/கிகி. அதேசமயம் ஹூண்டாய் Xtor சிஎன்ஜி -யின் மைலேஜ் 27.10 கிமீ/கி ஆகும்.

மேலும் படிக்க | மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்: இந்த வழிகளில் மானியம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News