Samsung முதல் OnePlus வரை: அக்டோபரில் அறிமுகம் ஆகவுள்ள அட்டகாச போன்களின் பட்டியல்

இந்த மாதம் நீங்கள் வாங்கக்கூடிய சில ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இந்த பதிவில் உள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்களை நல்ல விலையில் வாங்க பல சேல்களும் தள்ளுபடிகளும் இந்த மாதம் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2021, 12:00 PM IST
  • கடந்த மாதம், செப்டம்பரில், ஐபோன் 13 அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அக்டோபர் 2021-ல் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகவுள்ளன.
  • ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அக்டோபர் 29 அன்று அறிமுகம் ஆகக்கூடும்.
Samsung முதல் OnePlus வரை: அக்டோபரில் அறிமுகம் ஆகவுள்ள அட்டகாச போன்களின் பட்டியல்  title=

இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன.

கடந்த மாதம், செப்டம்பரில், ஐபோன் 13 அறிமுகப்படுத்தப்பட்டது. பல வாடிக்கையாளர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்த மாதம், அதாவது அக்டோபர் 2021-ல் அறிமுகம் ஆகவுள்ள ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

OnePlus 9RT
ஒன்பிளஸின் (OnePlus) இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் அக்டோபர் 15 அன்று வெளியிடப்படக்கூடும். இதைப் பற்றி அதிக தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. எனினும் இதன் அம்சங்கள் பற்றி பல விவரங்கள் கசிந்துள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டில் இயங்கும் இந்த போனில் 50 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி முன் கேமரா மற்றும் 8 ஜிபி ரேம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த போன் 4,500mAh பேட்டரி மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

Samsung Galaxy S21 FE
ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன் அக்டோபர் 29 அன்று அறிமுகம் ஆகக்கூடும். இந்த போன் 6.4 இன்ச் FHD+ Infinity-O டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5G சேவைகள், இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், IP68 சான்றிதழ் (நீர் எதிர்ப்பு) மற்றும் 6GB/8GB LPDDR5 RAM மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் வசதிகளுடன் வரும். கேமராவைப் பற்றி பேசுகையில், இதில் 12MP + 12MP பின்புற கேமரா மற்றும் 32MP முன் கேமரா ஆகியவை இருக்கக்கூடும்.

Google Pixel 6 மற்றும் Google Pixel 6 Pro
இந்த கூகுள் போன் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி/256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12, டூயல் சிம் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகிய அம்சங்களுடன் வரக்கூடும். இதில் 50 எம்பி பின்புற கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 8 எம்பி முன் கேமரா மற்றும் 4,614 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டிருக்கலாம்.

Google Pixel 6 Pro, 6.71-இன்ச் கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே, 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி/256 ஜிபி/512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 12 உடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி பின்புற முதன்மை கேமரா, 48 எம்பி டெலிஃபோட்டோ கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 12 எம்பி முன் கேமராவுடன் வரக்கூடும்.

Motorola Edge 20 Pro
இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் FHD + OLED டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 மற்றும் 12GB LPDDR5 RAM மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் வரும். இதில் நீங்கள் 108 எம்பி முதன்மை கேமரா மற்றும் 32 எம்பி முன் கேமராவைப் பெறுவீர்கள். இதில் 4,500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.

ALSO READ: Amazon-ல் சாம்சங் போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடிகள்: முந்துங்கள் 

Asus 8Z
64 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா வசதிகளுடன் கூடிய இந்த போன் 5.9 இன்ச் எஃப்எச்டி + அமோல்ட் டிஸ்ப்ளே, 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 16 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் வரக்கூடும். இது ஒரு 5 ஜி ஸ்மார்ட்போனாகும்.

Oppo A55 4G
இந்த ஒப்போ (Oppo) போன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 50 எம்பி பின்புற கேமராக்கள், 16 எம்பி முன் கேமராக்கள் மற்றும் நான்-ரிமூவபிள்  Li-Po 5,000mAh 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரக்கூடும்.

Realme GT Neo 2 
இந்த ரியல்மே போன் 6.62-இன்ச் முழு எச்டி+ 120Hz E4 + 120 அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரக்கூடும். இதில் நீங்கள் 64 எம்பி முதன்மை கேமரா மற்றும் 16 எம்பி முன் கேமராவைப் பெறலாம்.

இந்த மாதம் நீங்கள் வாங்கக்கூடிய சில ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதுதான். மேலும், இந்த ஸ்மார்ட்போன்களை நல்ல விலையில் வாங்க பல சேல்களும் தள்ளுபடிகளும் இந்த மாதம் உள்ளன.

ALSO READ: Flipkart Deals! இந்த ஸ்மார்ட்போன்களில் சிறப்பு தள்ளுபடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News