Vi அதிரடி ரீசார்ஜ் திட்டம்; மிரண்டுபோன Airtel மற்றும் Jio

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்ககி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 03:59 PM IST
Vi அதிரடி ரீசார்ஜ் திட்டம்; மிரண்டுபோன Airtel மற்றும் Jio title=

புதுடெல்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதன் பயனர்களுக்காக பல மலிவான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்கி வருகின்றனர். இன்று நாம் Vodafone Idea அல்லது (Vi) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் சேர்க்கப்பட்ட கூடுதல் சலுகைகளைப் பற்றி காண உள்ளோம். இது மட்டுமின்றி, ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்கள் எந்த திட்டத்திலும் பெறாத சலுகைகள் இவை ஆகும். Vi இன் இந்த கூடுதல் சலுகைகளின் சிறப்பு என்ன என்பதை விரிவாக காண்போம்.

Vi இன் சிறந்த கூடுதல் சலுகைகள்
வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்கு அற்புதமான ப்ரீபெய்ட் திட்டங்களை  (Prepaid Plans) வழங்கி வருகிறது. 2021 ஆம் ஆண்டில், Vi தனது ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கிடைக்கும் கூடுதல் சலுகைகளை மறுபெயரிட்டு அதற்கு 'Vi Hero Unlimited' என்று பெயரிட்டுள்ளது. இதன் கீழ், ப்ரீபெய்ட் திட்டங்களை எடுக்கும் பயனர்களுக்கு மொத்தம் நான்கு கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்

Vi's Binge All Night Offer
நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் இந்தச் சலுகை, இரவு வரை திரைப்படங்கள் மற்றும் தொடர்களைப் பார்க்க ஆர்வமுள்ள அனைவராலும் மிகவும் விரும்பப்படும். Binge All Night இல், ஒவ்வொரு இரவும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். 

டேட்டா ரோல்ஓவர்
வோடஃபோன் ஐடியாவின் இந்த அம்சத்தின் கீழ், வார நாட்களில் இருந்து, அதாவது திங்கள் முதல் வெள்ளி வரையிலான உங்கள் தினசரி டேட்டா முடிவடையவில்லை என்றால், மீதமுள்ள டேட்டாவை வார இறுதி நாட்களில் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம். 

நிறுவனத்தின் 'டெய்லி டிலைட்ஸ்' சலுகை
வோடபோன் ஐடியா இந்தச் சலுகையை கூடுதல் சலுகைகள் பட்டியலில் சில காலத்திற்கு முன்பு சேர்த்தது. இந்தச் சலுகையில், ப்ரீபெய்டு திட்டப் பயனர் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி அவசரத் தரவைப் பெறுகிறார். 

திட்டத்தில் OTT நன்மை கிடைக்கும்
இன்றைய காலகட்டத்தில், OTT தளங்களில் உள்ளடக்கத்தைப் பார்க்கும் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. Vi's 'Vi Hero Unlimited' நன்மைகளில் OTT நன்மையும் அடங்கும். நிறுவனத்தின் சொந்த OTT இயங்குதளமான 'Vi Movies & TV'க்கு சந்தா வழங்கப்படுகிறது, இதில் பயனர்கள் பல நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்கலாம்.

ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News