பொங்கலுக்கு விருந்து வைக்கும் பிளிப்கார்ட்... குடியரசு தின விற்பனை தேதிகள் அறிவிப்பு

Flipkart Republic Day Sale 2024: ஸ்மார்ட்போன்,  லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், பேஷன் பொருள்கள் என பல தயாரிப்புகளுக்கு சலுகைகளை அள்ளிவீசும் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை தேதிகள் மற்றும் அதுசார்ந்த பிற தகவல்கள் அனைத்தையும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 9, 2024, 08:22 PM IST
  • குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த தள்ளுபடி விற்பனை நடைபெறும்.
  • பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு ஒருநாள் முன்னர் விற்பனை தொடங்கும்.
  • அமேசானிலும் இதுபோன்ற விற்பனை நடைபெற உள்ளது.
பொங்கலுக்கு விருந்து வைக்கும் பிளிப்கார்ட்... குடியரசு தின விற்பனை தேதிகள் அறிவிப்பு title=

Flipkart Republic Day Sale 2024: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கமாக வழங்கும் தள்ளுபடி சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையான குடியரசு தின விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளதாக பிளிப்கார்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீபத்தில், பிளிப்கார்டின் போட்டி நிறுவனமான அமேசான் அதன் கிரேட் குடியரசு தின விற்பனை (Amazon Republic Day Sale 2024) அறிவித்திருந்தது, அதை தொடர்ந்து பிளிப்கார்டும் தனது விற்பனை தேதியை உறுதி செய்துள்ளது. 

அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கிரேட் குடியரசு தின விற்பனை எப்படி ஒருநாளுக்கு முன்னரே தொடங்குமோ, அதேபோல் பிளஸ் உறுப்பினர்களுக்கு பிளிப்கார்ட்டில் விற்பனை ஒரு நாள் முன்னதாகவே தொடங்குகிறது. விற்பனையில் கிடைக்கும் சலுகைகளின் விவரங்கள் பிளிப்கார்ட் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை குறித்த முழு விவரத்தையும் இதில் காணலாம். 

விற்பனை தேதி

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை வரும் ஜன. 14ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஜனவரி 19ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை ஒரு நாள் முன்னதாக அதாவது ஜனவரி 13ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பிளஸ் உறுப்பினர்கள் ஒரு நாள் முன்னதாகவே தளத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் முதல் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் வரை பல தயாரிப்புகளை தள்ளுபடிகளில் கிடைக்கும்.

மேலும் படிக்க | அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2024: முழு அப்டேட் இங்கே..!

சலுகைகள் என்னென்ன?

நீங்கள் விற்பனையில் உள்ள பொருட்களை நோ காஸ்ட் EMI மூலம் வாங்க முடியும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. மேலும், ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக, ஐபோன் ஸ்மார்ட்போன்களிலும் குறிப்பிடத்தக்க சலுகைகள் கிடைக்கும் என பிளிப்கார்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் புதிய சலுகைகள் கிடைக்கும். மூன்று மற்றும் இரண்டு பொருட்களை வாங்கினால் 5% சதவீதம் தள்ளுபடியும், மூன்று மற்றும் ஐந்து பொருட்களை வாங்கினால் 7% சதவீதம் தள்ளுபடியும் இருக்கும். இது தவிர, சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் விற்பனையில் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிராண்டின் சலுகைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் காலை 10 மணி வரையிலும் கிடைக்கும் என்றும் பிளிப்கார்ட் அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களிலும் வெடிக்கும் சலுகைகள் வழங்கப்படும். அமேசானில் வெளியிடப்பட்டது போன்று, எந்த போனுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பது இன்னும் வெளியாகவில்லை.

இதற்கும் தள்ளுபடி உண்டு

பிளிப்கார்டில் ஃபேஷன் மற்றும் அதன் பாகங்களை நீங்கள் 50-80 சதவிகிதம் வரை தள்ளுபடியுடன் வாங்கலாம். அழகு, உணவு மற்றும் பொம்மைகளுக்கு 85 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை 50-80 சதவீதம் வரை தள்ளுபடியுடன் வாங்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி, ஸ்மார்ட் கேஜெட்டுகள் மற்றும் ஆக்சஸரிகளுக்கு 50-80 சதவீத தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது தவிர உணவுப் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். 

மேலும் படிக்க | இளைஞர்கள் எதிர்பார்த்த 150சிசி பஜாஜ் பல்சர் மீண்டும் விற்பனையில்.. உடனடி டெலிவரி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News