Amazon சேலில் டெக்னோ போன்களுக்கு பம்பர் தள்ளுபடி: முந்துங்கள்!!

Amazon Sale: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை இந்தியாவில் தொடங்கப் போகிறது. இதில் டெக்னோ ஸ்மார்ட்போன்களில் வலுவான சலுகைகள் கிடைக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 11, 2022, 02:39 PM IST
  • அமேசானில் டெக்னோ போன்களுக்கு ஆயிரக்கணக்கில் தள்ளுபடி.
  • இந்த ஸ்மார்ட்போனின் எம்.ஆர்.பி ரூ. 28999 ஆகும்.
  • எனினும், எம்.ஆர்.பி-ஐ விட 45 சதவீதம் குறைவாக அமேசானிலிருந்து வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
Amazon சேலில் டெக்னோ போன்களுக்கு பம்பர் தள்ளுபடி: முந்துங்கள்!!  title=

டெக்னோ ஸ்மார்ட்போன் தள்ளுபடி சலுகை: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை இந்தியாவில் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே தள்ளுபடிகளின் மழை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பொருட்களிலும் நல்ல டீல்கள் கிடைக்கின்றன. அமேசானில் ஷாப்பிங் செய்து வாடிக்கையாளர்கள் அதிக பணத்தை மிச்சப்படுத்தலாம். நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் தொடங்குவதற்கு முன்பே, டெக்னோ ஸ்மார்ட்போன்களில் நல்ல சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகைகள், விவரக்குறிப்புகள் என இந்த டீலைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் விரிவாக காணலாம். 

Tecno POVA 5G (8GB+128GB)

இந்த ஸ்மார்ட்போனின் எம்.ஆர்.பி ரூ. 28999 ஆகும். எனினும், எம்.ஆர்.பி-ஐ விட 45 சதவீதம் குறைவாக அமேசானிலிருந்து வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் வெறும் ரூ. 15999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் இதன் விலை ஒரு மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனின் விலை போல் ஆகிவிடுகிறது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை வாடிக்கயாளர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் சேமிப்பில் வாங்கலாம். 

மேலும் படிக்க | iPhone 14 Series, தொடங்கியது முன்பதிவு: எங்கு வாங்கலாம், விலை என்ன? விவரம் இதோ 

விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 6000 mAh பேட்டரி மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ஆகையால் வாடிக்கையாளர்கள் இதில் சக்திவாய்ந்த அனுபவத்தைப் பெறுவார்கள்.

Tecno Spark 9 (Sky Mirror, 6GB RAM, 128GB Storage)

இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூபாய் 13499 ஆகும். ஆனால் அமேசான் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்கும் முன், இந்த ஸ்மார்ட்போனை வலுவான தள்ளுபடியுடன் வாங்கலாம். வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4000 தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 9499 க்கு வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இந்த அட்டகாசமான போனுக்கு மிகவும் குறைந்த விலையாகும். இது ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனின் விலைக்கு ஈடான விலையாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், வாடிக்கையாளர்களுக்கு 5000 mAh பேட்டரி மற்றும் வலுவான செயல்திறனை வழங்கும் Helio g37 கேமிங் செயலி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு விஐபி மொபைல் எண்ணை கொடுக்கும் வோடாஃபோன் சலுகை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News